மருத்துவமனை வருகையாளருக்கு முக அடையாள முறை பரிசோதனை

மருத்துவமனை வருகையாளருக்கு முக அடையாள முறை பரிசோதனை

1 mins read
e4fff5bf-91a2-4116-8eb4-4254bfc6ea43
சிங்ஹெல்த் டவரில் முக அடையாள அனுமதி முறை நேற்று செய்முறை மூலம் விளக்கிக் காட்டப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊட்­ரம் சமூக மருத்­து­வ­மனை, சிங்­ஹெல்த் டவர் ஆகி­ய­வற்­றில் சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளைப் பார்க்­கச் செல்­வோர், இப்­போது வரி­சை­யில் நின்று தங்­க­ளைப் பதிந்து­கொள்ள வேண்­டிய தேவை­யில்லை.

பதி­லாக, அவர்­கள் தங்­கள் முக அடை­யா­ளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு சாத­னத்­தின் வழி­யாக அனு­மதி பெற்று உள்ளே சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்­ல­லாம்.

மருத்­து­வ­மனைப் போவ­தற்கு முன்பே அவர்­கள் இணை­யம் மூலம் தங்­க­ளைப் பதிந்­து­கொள்­ள­லாம். இதற்­காக சிங்­ஹெல்த் அமைப்­பும் ஒருங்­கி­ணைந்த சுகா­தார தகவல் நிறு­வ­ன­மும் ஒரு முறையை உரு­வாக்கி இருக்­கின்­றன. பதிவு நடை­மு­றை­யின் ஓர் அங்­க­மாக தாங்­களே எடுத்­துக்­கொண்ட படத்தை வரு­கை­யா­ளர்­கள் இணை­யத்­தில் பதி­வேற்ற வேண்­டும்.

இணை­யத்­தில் இடம்­பெ­றும் புதிய அம்சத்­தில் முகச் சரி­பார்ப்பு ஏற்­பாடு இருக்­கிறது. இந்த வச­தியை சிங்­பா­ஸிற்­காக அர­சாங்க தொழில்­நுட்ப அமைப்பு உரு­வாக்கி இருக்­கிறது.

வரு­கை­யா­ளர்­க­ளின் முகங்­கள் ஒரு படச் சாத­னம் மூலம் மருத்­து­வ­ம­னை­யின் நுழை­வா­யி­லில் சரி­பார்க்­கப்­படும். அந்­தச் சாத­னம் உடல் வெப்­ப­நி­லை­யை­யும் அள­வி­டும். முக அடை­யா­ளம் ஒத்து இருக்­கும் பட்­சத்­தில் உள்ளே செல்ல அனு­மதி கிடைக்­கும். உடல் வெப்­ப­நிலை அள­வுக்கு அதி­க­மாக இருந்­தால் அனு­மதி கிடைக்­காது.

இத்தொழில்­நுட்பம் செப்­டம்­பர் 5 முதல் ஆறு மாத காலம் பரி­சோ­திக்­கப்­படுகிறது. இது, வருங்­கா­லத்­தில் சுகா­தாரக் குழு­மத்­தின் எல்லா மருத்­துவ நிலை­யங்­க­ளி­லும் அம­லா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.