குஜராத் நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தார் 12 பேர் பலி குஜராத்தில் தொங்குபால விபத்து: 134 பேர் பலியான சோகம்

குஜராத் நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தார் 12 பேர் பலி குஜராத்தில் தொங்குபால விபத்து: 134 பேர் பலியான சோகம்

2 mins read
cdaea2ee-1567-4410-8ade-7b0027c9162d
குஜராத்தில் மோர்பி நகரத்தில் பாலம் அறுந்து விழுந்த மச்சு என்ற ஆற்றில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்தன. ராணுவத்தினரும் கடற்படை முக்குளிப்பாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மோர்பி என்ற நகரில் மச்சு என்ற ஆற்றின் குறுக்கே அமைக்கப் பட்டிருந்த தொங்குபாலம் அறுந்து, ஆற்றில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 134ஐ தாண்டி விட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என சில ஊடகங்கள் கூறின.

அந்தப் பாலம் 150 ஆண்டுகள் பழைமையானது. கடந்த ஆறு மாத காலமாக பாலம் சீரமைக்கப்பட்டு கடந்த மாதம் 26ஆம் தேதி குஜராத்தின் புத்தாண்டு நாளன்று தான் பொதுமக்களுக்குப் பாலம் திறக்கப்பட்டது. பாலம் எந்த ஒரு நேரத்திலும் 100 பேரைத் தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 'சத்' எனப்படும் சமய வழிபாட்டை ஒட்டி விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாலத்தில் ஏறத்தாழ 500 பேர்வரை கூடினர்.

அவர்­களில் பல­ரும் ஆடிக்­கொண்­டும் பாடிக்­கொண்­டும் படம் எடுத்­துக்கொண்­டும் பாலத்­தின் தொங்குகம்­பி­களில் தொற்றி ஏறி இறங்கி விளை­யா­டிக்கொண்­டும் இருந்­த­தாகத் தெரிகிறது. அப்­போது திடீ­ரென்று 233 மீட்­டர் நீள­மும் 1.5 மீட்­டர் அக­ல­மும் கொண்ட அந்­தப் பாலம் அறுந்து ஆற்­றில் விழுந்தது.

ஏராள மக்­கள் ஆற்­றில் விழுந்து தத்­த­ளித்­த­னர். தக­வல் பர­வி­ய­தும் பொது­மக்­களும் மீட்­புப் பணி­யா­ளர்­களும் உத­விக்கு விரைந்­த­னர். மொத்­தம் 177 பேர் மீட்­கப்­பட்­ட­தாக அதிகாரிகள் நேற்று தெரி­வித்தனர்.

இத­னி­டையே, மூன்று நாள் பயணம் மேற்­கொண்டு குஜ­ராத் சென்­றி­ருக்­கும் பிர­த­மர் மோடி உட­ன­டி­யாக மீட்­புப் பணி­க­ளை முடுக்­கி­வி­டும்­படி உத்­த­ர­விட்­டார்.

அதை­ய­டுத்து, ஏரா­ள­மான படகு­களும் முக்­கு­ளிப்­பா­ளர்­களும் மீட்புப் பணி­யில் தீவி­ர­மாக ஈடு­பட்­ட­னர். இந்­திய ராணு­வம், கடற்­படையைச் சேர்ந்த வீரர்­களும் கடலோ­டி­களும் மீட்­புப் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

அந்­தப் பாலத்தை சீர­மைத்த யாதவ் என்­ப­வ­ருக்கு எதி­ராக குஜராத் காவல்­துறை புலன்­வி­சா­ர­ணை­யைத் தொடங்கி இருக்­கிறது.

பாலத்தைப் புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தச் சம்­ப­வம் பற்றி விசாரணை நடத்த ஐவர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்து இருக்­கிறது.

இத­னி­டையே, இந்­தச் சம்­ப­வம் பற்றிக் கருத்து கூறிய எதிர்த்­த­ரப்பு தலை­வர்­கள், அர­சாங்­கம் போதிய கவ­னம் செலுத்­தா­மலும் பாலத்தின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்தா மலும் அவசரப்பட்டு பாலத்­தைப் பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­விட்­ட­தா­கக் குறை­கூ­றி­னர்.

குஜ­ராத் தொங்குபாலம் ஆற்­றில் விழுந்த விபத்­தில் உயிர் இழந்­த­வர்­களில் 12 பேர் பாஜ­க­வைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மோகன்­பாய் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

"ஐந்து குழந்­தை­கள் உட்­பட என் குடும்­பத்­தைச் சேர்ந்த 12 பேரை இழந்து தவிக்­கிறேன். என் சகோ­த­ரி­யின் குடும்பத்தினரும் பலி­யா­கி­விட்­ட­னர்.

"இறந்­த­வர்­களில் பெண்­களும் குழந்­தை­களும் அதி­கம். மிக­வும் கவலை­யாக இருக்­கிறது," என குஜ­ராத்­தின் ராஜ்­கோட் தொகுதி எம்.பி.யான மோகன்­பாய் கூறினார்.