தேர்தல்; ஜோகூர் ஹோட்டல் அறைகள் நிரம்புகின்றன

மலே­சி­யா­வில் தேர்­தல் பிர­சா­ரம் சூடு­பி­டித்­துள்ள நிலை­யில் ஜோகூ­ரில் உள்ள ஹோட்­டல் அறை­கள் நிரம்பி வரு­கின்­றன.

ஜோகூ­ரில் உள்ள பெரும் பாலான ஹோட்­டல்­கள் நிய­மன நாள், வாக்­க­ளிப்பு நாளுக்கு ஆயத்­த­மாகி வரு­கின்­றன. இந்த இரு நாள்­க­ளி­லும் ஹோட்­டல் அறை­கள் நிரம்­பி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நவம்­பர் 5ஆம் தேதி நிய­மன நாளா­கும். நவம்­பர் 19ஆம் தேதி வாக்­க­ளிப்பு நடைபெறுகிறது.

'லோட்­டஸ் தேசாரு பீச் ரிசார்ட் அண்ட ஸ்பா'வின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான இந்­திரா காந்தி ரெங்­க­சாமி பிள்ளை, நிய­மன நாள், வாக்­க­ளிப்பு நாள் ஆகிய இரு நாள்­க­ளி­லும் முன்­ப­திவு கூடி வரு வதாகக் கூறினார்.

இரு வார இறு­தி­க­ளி­லும் குறைந்­தது எழு­பது விழுக்­காடு அறை­கள் நிரம்­பி­வி­டும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"பல அர­சி­யல் கட்­சி­களின் பிர­மு­கர்­கள் அறை­க­ளுக்கு முன்­கூட்­டியே பதிவு செய்ய விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் இந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது," என்றார் அவர்.

'திசில் ஹோட்டல் ஜோகூர்பாரு' விலும் இதே நிலைமை நீடிக்கிறது.

நியமன நாளன்று ஏற்கெனவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டன என்று அந்த ஹோட்டலின் பொது மேலாளர் ராபர்ட் லீ கூறியதாக 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு மட்டு மல்லாமல் பொழுதைக் கழிப்பதற் காக சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளாலும் முன்பதிவு கூடி உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப் பதை உறுதி செய்ய, உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!