நேப்பாளத்தில் நிலநடுக்கம்; குறைந்தது அறுவர் பலி

நேப்பாளத்தில் நிலநடுக்கம்; குறைந்தது அறுவர் பலி

1 mins read
91de3324-d61a-4720-8ddb-2459d060d564
இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. படம்: இபிஏ -

நேப்­பா­ளத்­தில் சக்­தி­வாய்ந்த நில­நடுக்­கம் நேற்­றுக் காலை நேர்ந்­தது. அதில் குறைந்­தது அறு­வர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

6.6 ரிக்­டர் அள­வில் நில­ந­டுக்­கம் பதி­வான நிலை­யில், இந்­திய தலை­ந­க­ரான புதுடெல்­லி­யி­லும் மணிப்­பூ­ரி­லும் அதிர்­வு­கள் உண­ரப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நேப்­பா­ளத்­தின் மேற்கு மாவட்­ட­மான டோட்­டி­யில் பல வீடு­கள் தரை­மட்­ட­மா­கி­ய­தா­க­வும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

நள்­ளி­ர­வில் மக்­கள் தூங்­கிக் கொண்­டி­ருந்த வேளை நில­ந­டுக்­கத்­தால் பயந்து வீடு­களில் இருந்து வெளி­யே­றிச் சாலை­க­ளுக்கு வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நேப்­பாள நில­ந­டுக்­கத்­தின் மையம், பூமிக்­க­டி­யில் 10 கி.மீ ஆழத்­தில் பதி­வா­ன­தாக டெல்­லி­யின் தேசிய நில­ந­டுக்­க­வி­யல் மையம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் ஐவ­ருக்­குப் படு­கா­யங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் டோட்டி காவல்­து­றை­யி­னர் கூறி­யுள்­ள­னர். இடி­பா­டு­க­ளுக்­கி­டையே சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்­கும் பணி தொடர்ந்து நடந்­து­வ­ரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

குறைந்­தது இரண்டு பேரை இன்­னும் காண­வில்லை என்­றும் மீட்­கப்­பட்­டோ­ரில் ஒரு குழந்­தை­யும் அடங்­கும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, நில­ந­டுக்­கத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­களுக்கு பிர­த­மர் ஷெர் பக­தூர் டூபா டுவிட்­டர் வழி தமது அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­தார்.

நேப்­பா­ளத்­தில் முன்­ன­தாக 2015ல் நேர்ந்த இரு பெரும் நில­நடுக்­கங்­களில் கிட்­டத்­தட்ட 9,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

நக­ரங்­களும் பல நூற்­றாண்டு பழமைவாய்ந்த ஆல­யங்­களும் அந்த நில­ந­டுக்­கங்­க­ளால் அழிக்­கப்­பட்­டன. அத்­து­டன் பொரு­ளி­ய­லில் $6 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$8 பி.) இழப்­பும் நேர்ந்­தது.

அதை­ய­டுத்து நேப்­பா­ளம் மீண்டு­வ­ரும் நிலை­யில் இந்த நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.