சிங்கப்பூரின் பேநவ், இந்தியாவின் யுபிஐ மின்கட்டண முறைகள் விரைவில் இணைப்பு 

சிங்கப்பூர், இந்தியாவின் பேநவ், யுபிஐ விரைவு மின்கட்டண முறைகள் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படும் என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பெரியசாமி குமரன் கூறியுள்ளார்.

பேநவ், யுபிஐ மின்கட்டணமுறைகளுக்கு இடையிலான இணைப்பு குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு பயன்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் இடையே உடனடியாகவும் குறைந்த கட்டணத்திலும் கைபேசிவழி தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிவிட முடியும்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்திய மத்திய வங்கியும் மின்கட்டண முறைகளை இணைக்கும் திட்டத்தை 2021 செப்டம்பரில் அறிவித்தன.

2022 ஜூலைக்குள் திட்டம் நிறைவுபெறும் என்று அவை அப்போது கூறியிருந்தன.

தற்போது இரு நாடுகளும் தங்கள் மின்கட்டணமுறைகளை இணைப்பதற்கான தொழில்நுட்ப ஆயுத்தங்களை முடித்துள்ளதாக இந்தியத் தூதர் கூறினார்.

அடுத்த சில மாதங்களில் அத்திட்டம் நிறைவுபெறும் என்றும் அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி அறிவிப்பார் என்றும் திரு குமரன் தெரிவித்தார்.

சிறிய தொகையை அனுப்ப விரும்பும் எந்த ஊழியரும் பணமாற்று நிறுவனங்கள் தற்போது விதிக்கும் கட்டணத்தைவிட மிகக் குறைந்த செலவில் பணம் அனுப்பலாம். ஒரே முறையாக பெரிய தொகையை அனுப்பி வந்தவர்களுக்கும் இது மிகவும் பயன் தரும். அவர்கள் இனி சிறு சிறு தொகைகளை அனுப்பலாம். அதற்கான கட்டணம் குறைவாகத் தான் இருக்கும்.
பெரியசாமி குமரன்
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர்

சிங்கப்பூரில் உள்ள இந்திய ஊழியர்கள் சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்பும்போது, இங்குள்ள வங்கிகளும் பணமாற்று நிறுவனங்களும் சுமார் 10 விழுக்காட்டைக் கட்டணமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தியாவின் யுபிஐ கட்டணமுறையை தங்கள் நாட்டு மின்கட்டண முறைகளுடன் இணைத்துள்ளன.

அதே போல பிலிப்பீன்சும் இந்தியாவும் மின்கட்டண முறைத் தொடர்புகளை உண்டாக்கச் செயல்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!