ஐக்கியத்துக்கான ஆசியான் முயற்சிகள் வலுவாகட்டும் அதிகரிக்கும் பதற்றம், நிச்சயமில்லா சூழலைச் சுட்டிக்காட்டி பிரதமர் வலியுறுத்து

ஐக்கியத்துக்கான ஆசியான் முயற்சிகள் வலுவாகட்டும் அதிகரிக்கும் பதற்றம், நிச்சயமில்லா சூழலைச் சுட்டிக்காட்டி பிரதமர் வலியுறுத்து

3 mins read
4b682f0d-3080-4f8a-bf99-2af2cc1e3fdc
பிரதமர் லீ சியன் லூங் நேற்று கம்போடியாவின் நோம்பென் நகரில் சீனப் பிரதமர் லீ கெச்சியாங்குடன் இரு தரப்பு சந்திப்பு நடத்தினார். அருமையான இருதரப்பு உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், பரந்த அளவிலான இருநாட்டு ஒத்துழைப்பு, வட்டார, அனைத்துலக பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். படம்: சாவ் பாவ் -

ஆசி­யான் உறுப்பு நாடு­கள் ஒன்றா­கச் சேர்ந்து செயல்­பட வேண்­டிய தேவை இருக்­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­திக் கூறி­யுள்ளார்.

பெரிய வல்­ல­ர­சு­க­ளுக்கு இடை­யில் போட்­டா­போட்டி அதி­ க­ரிப்­ப­தால் ஆசி­யான் பிரிந்­து­விட வழி­வ­குத்­து­வி­டக்கூடாது என்று அவர் உறு­தி­படத் தெரி­வித்­தார்.

அதா­வது, அந்­தத் தென்­கிழக்கு ஆசிய அமைப்பு தொடர்ந்து திறந்­த­நி­லை­யில் இருந்­து­வர வேண்­டும்; வெளி பங்­காளி நாடு­களை ஈடு­படுத்து ­வ­தில் எல்­லா­ரை­யும் உள்­ள­டக்கும் அணு­கு­மு­றையை அது கடைப்­பி­டிக்க வேண்­டும்;

ஆசி­யான் உறுப்பு நாடு­கள் ஐக்­கி­யத்­தைக் கட்­டிக்­காக்க வேண்­டும்; நடு­நி­லை­யைத் தொடர்ந்து அது கடைப்­பி­டித்து வர­வேண்­டும்; இப்­படி செயல்­படு­வ­தன் மூலம் ஆசி­யான் ஏற்­பு­டைய, பொருத்­த­மான, நம்­பத்­தகுந்த அமைப்­பாக தொடர்ந்து இருந்து வரமுடி­யும் என்று பிர­தமர் தெரி­வித்­தார்.

கம்­போ­டி­யா­வின் நோம்­பென் நக­ரில் 41வது ஆசி­யான் உச்­ச­நிலை மாநாடு தொடங்­கி­யது.

அதில் கலந்­து­கொண்ட சக தலை­வர்­கள் மத்­தி­யில் உரை ஆற்றிய திரு லீ, உல­கில் இப்­போது புவி­சார் அர­சி­யல் பதற்றங்­கள் கூடி­வ­ரு­வ­தா­க­வும் வல்­ல­ரசு நாடு­க­ளுக்கு இடை­யில் போட்­டா­போட்டி அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தார். உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்த விவ­கா­ர­மும் இதில் அடங்­கும் என்­றார்.

ஆசி­யா­னின் 40, 41வது உச்­ச­நிலை மாநாடு நேற்று தொடங்­கி­யது. அதற்கு கம்­போ­டி­யப் பிர­த­மர் ஹுன் சென் தலைமை ஏற்று இருக்­கி­றார்.

அந்த இரண்டு மாநா­டு­களும் பொது­வாக ஓராண்­டில் தனித்­தனி­யாக முன்­னும் பின்­னும் நடக்­கும். ஆனால், இந்த ஆண்டு ஒரே­நா­ளில் நடக்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் அதி­க­ரித்து வரும் பதற்­றம் பற்றிக் குறிப்­பிட்ட திரு லீ, அதன் கார­ண­மாக இரு தரப்பு­களுக்­குமே பேரள­வில் தொடர் விளை­வு­கள் ஏற்­படும் என்­றும் அதோடு மட்­டு­மின்றி, இந்த வட்­டா­ர­மும் உல­க­மும் பாதிப்­ப­டை­யும் என்றும் கூறி­னார்.

தென்சீனக் கடல் பகுதி பற்றிக் குறிப்­பிட்ட பிர­த­மர், அதன் வழி­யாக நடக்­கும் வர்த்­த­கத்­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

இதைக் கருத்­தில்­கொண்டு பார்க்­கை­யில், அந்­தப் பகு­தி­யில் அமை­தி­யை­யும் நிலைப்­பாட்­டை­யும் நிலை­நாட்­டும் பொறுப்பு ஆசி­யான் உறுப்பு நாடு­க­ளுக்கு உள்­ளது என்று தெரி­வித்­தார்.

தென்சீனக் கடல் தொடர்­பான சச்­ச­ர­வு­கள், அமை­தி­யான முறை­யில் அனைத்­து­லக சட்­டத்­திற்கு உட்­பட்டு தீர்வு காணப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

தென்சீனக் கட­லில் விரும்­பத்­த­காத சம்­ப­வங்­கள் நிகழ்­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளை­யும் பதற்­றங்­கள் தலை­தூக்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களை­யும் கூடு­மானவரை குறைப்­பதற்கு ஆசி­யான் நாடு­கள் தங்­களுக்கு இடை­யி­லும் சீனா­வோ­டும் நடத்தை நிய­தி­க­ளின் பேரில் தொடர்ந்து செயல்­பட்டு வர­வேண்டும் என்­றார் திரு லீ.

அத்­த­கைய நடத்தை நிய­தி­கள் பற்­றிய பேச்­சு­வார்த்­தை­கள் 20 ஆண்­டு­க­ளாக நடந்­து­வ­ரு­கின்­றன.

ஆசி­யான் தலை­வர்­க­ளுக்­கும் சீனப் பிர­த­மர் லீ கெச்சியாங்கிற்கும் இடை­யில் நடந்த சந்­திப்­பின்­போது ஆசி­யான்-சீனா தாராள வர்த்­தக வட்­டா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை தொடங்­கப்­பட்­டது.

பெரும் வல்­ல­ர­சு­களை ஈடு­படுத்தி பல்­வேறு நில­வ­ரங்­க­ளை­யும் பற்றி விவா­திப்­பது எப்­படி என்­ப­தை­யும் ஒத்­து­ழைப்பை ஆழப்­படுத்­து­வது எப்­படி என்­ப­தை­யும் கிழக்கு ஆசிய உச்­ச­நிலை மாநாடு மூலம் ஆசி­யான் வெளிப்­ப­டுத்­து­கிறது என்­பதை திரு லீ சுட்­டினார்.

இந்த மாநாடு ஞாயிற்­றுக்­கிழமை நடக்­கிறது. அதில் ஆஸ்­தி­ரே­லியா, சீனா, இந்­தியா, ஜப்­பான், தென்கொரியா, நியூ­சி­லாந்து, ரஷ்யா, அமெ­ரிக்க ஆகிய நாடு­களின் தலை­வர்­களை ஆசி­யான் தலை­வர்­கள் சந்­திக்­கி­றார்­கள்.

நிலை­யில்­லாத ஓர் உல­கில் தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் அமை­தியை, நிலைப்­பாட்டை, வளர்ச்­சியை ஆசி­யான் எப்­படி நிலை­நாட்டி வந்­தி­ருக்­கிறது என்­பதை தொடக்­கத்­தில் திரு லீ விவ­ரித்­தார்.

ஆனா­லும், இப்­போது பதற்­ற­மும் அனைத்­து­லகப் பிரச்­சி­னை­களும் தலை­தூக்­கு­வ­தால் அத்­த­கைய அமை­தியை ஆசி­யான் கிள்­ளுக்­கீ­ரை­யா­கக் கருத முடி­யாது என்று திரு லீ எச்­ச­ரித்­தார்.