நாள்பட்ட நோய்களை சமாளிக்க வெளிநாட்டு ஊழியருக்கு உதவி

நாள்பட்ட நோய்களை சமாளிக்க வெளிநாட்டு ஊழியருக்கு உதவி

2 mins read
acea8f10-bd5e-4201-a62e-d100bdc5fe8c
ஃபுல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனம் கல் சர்க்கிளில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்திவரும் மருத்துவ நிலையத்தில் ஊழியர் ஒருவர் மூத்த மனிதவளத் துணை அமைச்சர் கோ போ கூனுக்கு விளக்கமளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாள்­பட்ட நோயுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அந்­நோயைச் சமா­ளிக்க விரை­வில் உதவி பெற­வுள்­ள­னர். மனி­த­வள அமைச்சு அதன் தொடர்­பில் அவர்­க­ளுக்­காக புதிய திட்­டத்தை நேற்று தொடங்­கி­யது.

அத்­திட்­டத்­தின்­கீழ், நாள்­பட்ட நோய்­கள், தொற்­று­நோய்­கள், பல் நோய், சத்­து­ணவு, மன­ந­லம் ஆகி­யவை பற்றி வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் தாய்­மொ­ழி­களில் உள்ள தக­வல்­கள் மனி­த­வள அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் வெளியிடப்­படும். அவை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான மருத்­துவ நிலை­யங்­க­ளி­லும் கிடைக்­கும்.

அடிப்­ப­டைச் சுகா­தா­ரத் திட்­டத்­தில் சேர்ந்­தி­ருக்­கும் 40 வய­துக்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் இத­ய­நோய்க்­கான அடிப்­படை பரி­சோ­த­னைக்­கும் ஒவ்­வோர் ஆண்­டும் அனுப்­பப் படு­வர். அதே­போல குடும்­பத்­தா­ருக்கு நாள்­பட்ட நோய் இருப்­ப­வர்­களும் அந்த இத­ய­நோய் பரி­சோ­த­னைக்­குச் செல்­வார்­கள்.

பிசிபி என்று அழைக்­கப்­படும் அடிப்­படை சுகா­தா­ரத் திட்­டம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குக் கட்­டா­ய­மா­னது. அந்த மருத்­து­வத் திட்­டத்­துக்­கான தொகையை முத­லா­ளி­கள் செலுத்­து­கின்­ற­னர்.

'புரோ­ஜெக்ட் மோக்கா' (வாய், மற்­றும் நாள்­பட்ட நோய்­கள், பிணி ­க­ளைச் சமா­ளித்­தல்) என்று அழைக்­கப்­ப­டு­ம் அந்தத் ­திட்­டத்தின்மூலம் சுமார் 300,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மூலம் பயன்­பெ­று­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஃபுல்லர்ட்­டன் ஹெல்த் நிறு­வனம் கல் சர்க்­கி­ளில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக நடத்­தி­வ­ரும் மருத்­துவ நிலை­யத்தை நேற்று சென்று பார்­வை­யிட்­ட­போது மூத்த மனி­த­வ­ளத் துணை அமைச்­சர் கோ போ கூன் புதிய திட்­டத்­தைத் தொடங்­கி­வைத்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உடல்­ந­ல­மில்­லா­த­போது அவர்­க­ளுக்­குப் பரா­ம­ரிப்பு வழங்­கு­வது மட்­டும் போதாது என்­றார் டாக்­டர் கோ.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், புதி­தாக சிங்­கப்­பூர் வரும் எட்டு வெளி­நாட்டு ஊழி­யர்­களில் ஒரு­வ­ருக்கு, நீரி­ழிவு நோய், உயர் ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக் கொழுப்பு போன்ற நாள்­பட்ட நோய்­களில் ஒன்றாவது இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

"முறை­யான மருத்­துவ சிகிச்சை இல்­லா­மல் இந்­நோய்­கள் தொடர்ந்து நீடிக்க அனு­ம­திக்­கப்­பட்­டால், நமது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குக் காலப்­போக்­கில் கடு­மை­யான நோய்ச் சிக்­கல்­கள் ஏற்­படும். அது அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிக்­கும்."

"இது முத­லா­ளி­க­ளுக்­கும் பல சுமை­களை ஏற்­ப­டுத்­த­லாம். அத­னால் எல்­லா­ரும் ஒட்­டு­மொத்த மாகப் பலன்­பெ­று­வ­தற்கு அதைச் சமா­ளித்­தாக வேண்­டும்," என்று டாக்­டர் கோ கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான விளக்க சாலைக்­காட்சி நிகழ்ச்­சி­களும் நடத்­தப்­படும். தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கம், வாய், பல் சுகா­தா­ரம் பற்றி வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு எடுத்­து­ரைக்க கடந்த செப்­டம்­பரில் நடத்­திய நிகழ்ச்சி அதற்­கான முன்­னோட்­ட­மாக அமைந்­தது.