பிரதமர்: நிலையான புவிசார் அரசியல் சூழல் அவசியம்

பிரதமர்: நிலையான புவிசார் அரசியல் சூழல் அவசியம்

3 mins read
55eb9378-1e36-41b5-8f29-995a7eeebada
உறவுகளை மேம்படுத்துவதில், சீன-அமெரிக்க அதிபர்களின் நேரடிச் சந்திப்பு முக்கியமான ஒன்று என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். படம்: சாவ் பாவ் -

இந்த வட்­டா­ரம் தொடர்ந்து செழிப்­ப­டைய நிலை­யான புவி­சார் அர­சி­யல் சூழல் முக்­கி­யம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடனும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் நேர­டி­யாக சந்­திக்­க­வி­ருக்­கி­றார்­கள். இந்­தச் சந்­திப்பு இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் உறவு சீர்­கெ­டு­வதைத் தடுக்க மிக முக்கி­யம் என்று அவர் தெரி­வித்­தார்.

கம்­போ­டி­யா­வின் நோம்­பென் நக­ரில் நடந்த கிழக்கு ஆசிய கருத்­த­ரங்­கை­யொட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு லீ பேசி­னார்.

"அமெ­ரிக்க-சீன அதி­பர்­கள் வெளிப்­ப­டை­யா­கப் பேசி தங்­கள் கருத்­து­களை முன்­வைக்க வேண்டும். பிரச்­சி­னை­கள் பற்றி அவர்­க­ளுக்­குத் தெரி­யும்.

"அவற்­றுக்­குத் தீர்வு காணும் அர­சி­யல் உறு­தி­யு­டன், விவே­கத்­து­டன் இரு தரப்­பு­ம் செயல்­பட வேண்­டும்," என்றார் திரு லீ.

"இந்­தோ­னீ­சி­யா­வில் நடக்­கும் ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டை­ ஒட்டி திரு பைட­னும் திரு ஸியும் இன்று சந்­திக்­கத் திட்­ட­மி­டப்­பட்டுள்­ளது. அந்­தச் சந்­திப்பு நல்­ல­படி நடக்­கும் என்று நம்­பு­கி­றேன்.

"அமெ­ரிக்க-சீன உறவு சீர்­கெடு­வ­தைத் தடுப்­ப­தில் அந்­தச் சந்­திப்பு முக்­கி­ய­மா­னது.

"அதன்­மூ­லம் பரஸ்­பர நம்­பிக்கை பலப்­படும். பல்­வேறு தனிப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தன் தொடர்­பில் செயல்­படு­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வும் அந்­தச் சந்­திப்பு வழி­வ­குக்­கும்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் பிரச்­சி­னை­கள் வலுத்­துள்­ளன.

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்­த­தால் பல விளை­வு­கள் ஏற்­பட்டு இருக்­கின்­றன. என்­றா­லும்­கூட நோம்­பென் நக­ரில் நடந்த 18 நாடு­களை உள்­ள­டக்­கிய கிழக்­கா­சிய கருத்­த­ரங்­கில் அமெ­ரிக்க அதி­பர், சீனப் பிர­த­மர், ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்­தது பற்றி கருத்து கூறிய பிர­த­மர் லீ, ரஷ்­யா­வின் அந்­தச் செய்கை அனைத்­து­லக சட்­டத்தை மீறிய செய­லா­கும் என்­றார்.

அதன்­ மூ­லம் நிலைப்­பா­ட்டுக்கு மிரட்­டல் ஏற்­பட்டு இருக்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் பிரச்­சி­னைக்கு விரை­வில் அமைதித் தீர்வு காணப்­பட வேண்­டும் என்­பதே ஆசி­யா­னின் விருப்­பம் என்­பதை தாங்­கள் மீண்டும் வலி­யு­றுத்­திக் கூறு­வ­தாக திரு லீ தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஆசி­யான், ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து தாராள வர்த்­தக வட்­டா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான கணி­சமான பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து முடிந்­துள்­ளன.

நெருக்­கடி காலத்­தின்­போது அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் தடை­ப­டா­மல் கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்த சேர்ந்து பாடு­பட அந்தத் தாராள வர்த்­தக வட்­டார நாடு­கள் உறுதி தெரி­வித்துள்ளன.

நியூ­சி­லாந்­து­டன் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு ஒன்­றி­லும் சிங்­கப்­பூர் கையெ­ழுத்­திட்­டது.

அந்த உடன்­பாடு பசு­மைப் பொரு­ளி­ய­லில் வட்­டார ஒத்­துழைப்­புக்கு வழி­காட்­டும் ஓர் ஏற்­பா­டாக இருக்­கும் என்று திரு லீ வர்­ணித்­தார்.

இருந்­தா­லும் நம் முயற்சி களுக்குக் கிடைக்­கும் வெற்றி என்­பது நிலை­யான புவி­சார் அர­சி­யல், பாது­காப்­புச் சூழ­லைப் பொறுத்தே இருக்­கும் என்று திரு லீ வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

இத­னி­டையே, ஆசிய பசி­பிக் பரந்த படிப்படியாக முன்னேற்றம் காணும் பங்­கா­ளித்­துவ உடன்­பாட்­டில் (சிபி­டி­பிபி) சேர சீனா விண்­ணப்­பித்து இருப்­ப­தன் முடிவு பற்றி இனி­மேல்தான் தெரி­ய­ வரும் என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

அந்த உடன்­பாட்­டில் சேர இதர நாடு­களும் விண்­ணப்­பித்து உள்­ளன. எல்­லாமே அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உரிய உயர்ந்த தரங்­களை நிறை­வேற்ற வேண்டி இருக்­கும் என்­றாரவர்.

அந்­தப் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு திறந்த நிலை­யி­லான ஒன்­றாக வடி­வ­மைக்­கப்­பட்டு இருக்­கிறது. அது எல்லா நாடு­க­ளை­யும் உள்­ள­டக்­கும் உடன்­பா­டாக வகைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

இருந்­தா­லும்­கூட அதில் அங்கம் வகிக்­கும் நாடு­கள் பின்­பற்­றப்­பட வேண்­டிய நடை­மு­றை­கள் இருக்­கின்­றன என்­பதை பிர­த­மர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அந்த உடன்­பாட்­டில் தெள்ளத்­தெ­ளி­வாக விதி­மு­றை­கள் சுட்­டிக்­காட்­டப்­பட்டு உள்­ளன.

ஆகை­யால், அந்த உடன்­பாட்­டில் சேர சீனா கொண்­டுள்ள ஆர்­வத்தை கொள்கை அள­வில் ஆத­ரிப்­ப­தாக சிங்­கப்­பூர் தெரி­வித்­துள்­ளது என்­றார் அவர்.

அமெரிக்க-சீன அதிபர்கள் சந்திப்பு முக்கியமான ஒன்று என விளக்கம்