அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் நடந்த இரண்டாம் உலகப் போர் விமான திறன்விளக்கக் காட்சியில் பங்கெடுத்த இரண்டு விமானங்கள் ஆகாயத்தில் மோதிக்கொண்டதில் இருவர் மாண்டுவிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
அந்த விமானங்களில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உடனடியாகத் தெரிய வில்லை என்று நேற்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அந்த சாகச காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விமானங்கள் கலந்துகொண்டதாக ஊடகங்கள் கூறின. போர் வீரர்கள் நினைவு நாளை ஒட்டி அந்த சாகச நிகழ்ச்சி நடந்தது.
போயிங் பி-17 ஃபிளையிங் போட்ரஸ் என்ற குண்டுபோடும் பெரிய விமானமும் பி-63 கிங் கோப்ரா என்ற சிறு விமானமும் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் மோதிக்கொண்ட தாக மத்திய விமானப் போக்கு வரத்து நிர்வாகம் தெரிவித்தது.
டல்லஸ் நகரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் இருக்கும் விமான நிலைய ஆகாய வளியில் அந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.
விபத்து பற்றி மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் கழக மும் விசாரணை நடத்தும் என்று அந்த நிர்வாகம் கூறியது.
ஆகாயத்தில் சிறிய விமானம் வேகமாகச் சென்று பெரிய விமா னத்தில் மோதியதை இணையத் தில் பதிவேற்றப்பட்ட பல காணொளி கள் காட்டின.

