ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சிங்கப்பூர்-ஜெர்மனி

சிங்­கப்­பூர்-ஜெர்­மனி இடையே பல்­வேறு துறை­க­ளி­லும் ஒத்­து­ழைப்பை வலுப்படுத்த பிர­த­மர் லீ சியன் லூங்­கும் ஜெர்­மா­னி­யப் பிர­த­மர் ஒலாஃப் ஷொல்­சும் இணக்­கம் தெரி­வித்­துள்ளனர். புதுப்­பிக்­கப்­பட்ட வரை­வுத்­திட்­டம் இரு­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வத்தை வலுப்­ப­டுத்த வகை­செய்­கிறது.

தற்­காப்பு, கல்வி, பொரு­ளி­யல் போன்ற வழக்­க­மான துறை­க­ளு­டன், பரு­வ­நிலை மாற்­றம், புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல் போன்ற புதிய துறை­களும் அவற்­றில் அடங்­கும்.

இஸ்­தா­னா­வில் நேற்று நேரில் சந்­தித்­துப் பேசி­ய­பின் இரு தலை­வர்­களும் செய்­தி­யா­ளர்­க­ளைக் கூட்­டா­கச் சந்­தித்­த­னர்.

அப்­போது, வல்­ல­ரசு நாடு­களுக்கு இடை­யி­லான போட்டி, பரு­வ­நிலை மாற்­றம், விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­கள் போன்ற பல உல­க­ளா­விய சவால்­க­ளுக்கு இடையே சிங்­கப்­பூ­ரும் ஜெர்­ம­னி­யும் தங்­க­ளுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­தும் என்று அவ்­வி­ரு­வ­ரும் ஒரு கூட்­ட­றிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­த­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்­றுக் காலத்­தில் இரு நாடு­க­ளுக்கு இடை­யிலான பொரு­ளி­யல் தொடர்­பு­கள் வலு­வாக இருந்­த­தா­கக் குறிப்­பிட்ட பிர­த­மர் லீ, தடுப்­பூசி கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்த இரு நாடு­களும் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றி­ய­தா­க­வும் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஜெர்­ம­னிக்­கும் இடை­யி­லான தற்­காப்பு உறவு நல்ல நிலை­யில் இருப்­ப­தா­க­வும் மேம்­பட்டு வரு­வ­தா­க­வும் திரு லீ குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யின் இரு நீர்­மூழ்­கிக் கப்­பல்­களை அறி­முகப்­படுத்­து­வ­தற்­காக அடுத்த மாதம் ஜெர்­மா­னி­யத் துறை­முக நக­ரான கிய­லுக்­குத் தாம் செல்­ல­வி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

ரஷ்யா-உக்­ரேன் போர் போன்ற வட்­டார, உலக அள­வி­லான பிரச்­சி­னை­கள் குறித்­தும் திரு ஷொல்­சு­டன் தாம் கலந்­தா­லோ­சித்­த­தா­கப் பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

ஜெர்­மா­னி­யப் பிர­த­மர் ஷொல்ஸ் பேசு­கை­யில், "சிங்­கப்­பூ­ருக்­கும் ஜெர்­ம­னிக்­கும் இடை­யி­லான உறவு­கள் அணுக்­க­மா­னவை. அவற்றை மேலும் வலுப்­ப­டுத்த இரு நாடு­களும் இலக்கு கொண்­டுள்­ளன. இந்த வட்­டா­ரத்­தில் சிங்­கப்­பூர் போன்ற நம்­ப­க­மான பங்­காளி­யைக் கொண்­டி­ருப்­ப­தில் மிக்க மகிழ்ச்சி அடை­கி­றேன்," என்­றார்.

உல­கம் பல துரு­வங்­க­ளா­கப் பிள­வு­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு ஷொல்ஸ், அனைத்து நாடு­களுக்­கும் பங்­கா­ளி­கள் தேவை என்­றும் அனை­வ­ரும் பல­த­ரப்பு ஒத்­து­ழைப்­பைச் சார்ந்­தி­ருக்­கி­றோம் என்­றும் சொன்­னார்.

ஒரு­நாள் பய­ண­மாக நேற்று சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தார் திரு ஷொல்ஸ். கடந்த ஆண்டு டிசம்­பரில் ஜெர்­மா­னி­யப் பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்­ற­பின் அவர் சிங்­கப்­பூர் வந்­தது இதுவே முதன்­முறை.

அதிபர் ஹலிமா யாக்­கோப்­பை­யும் அவர் நேற்று சந்­தித்­துப் பேசி­னார்.

மின்­னி­லக்­க­ம­யம், அமெ­ரிக்கா-சீனா உற­வு­நிலை, ஜி20 மாநாடு, உக்­ரேன் போர் போன்ற பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து திரு ஷொல்­சு­டன் பேசி­ய­தாக அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

திரு ஷொல்­சைச் சிறப்­பிக்­கும் வகை­யில், இஸ்­தா­னா­வில் உள்ள ஒரு­வகை ஆர்க்­கிட் மல­ருக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!