குறைந்த வருமான ஊழியருக்கு 5.5%-7.5% ஊதிய உயர்வு வழங்க தேசிய சம்பள மன்றம் பரிந்துரை

குறைந்த வருமான ஊழியருக்கு 5.5%-7.5% ஊதிய உயர்வு வழங்க தேசிய சம்பள மன்றம் பரிந்துரை

2 mins read

மோன­லிசா

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் ஊழி­யர்­க­ளுக்கு 5.5 முதல் 7.5 விழுக்­காடு அல்­லது குறைந்­தது 80 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை ஊதிய உயர்வு வழங்க வேண்­டும் என்று தேசிய சம்­பள மன்­றம் பரிந்­து­ரைத்­துள்­ளது. இவ்­வூ­திய உயர்வு, மொத்த மாத ஊதி­ய­மாக 2,200 வெள்ளிவரை ஈட்­டு­ப­வர்­க­ளுக்­குப் பொருந்­தும்.

செல­வின அதி­க­ரிப்­பை­யும் நிச்­ச­ய­மற்ற வணிக வாய்ப்­பு­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் எதிர்­கொண்டு வரு­வதால், ஊதிய உயர்வு நியா­ய­மா­ன­தா­க­வும் நிலைத்­தன்மை உடை­ய­தா­க­வும் இருத்­தல் அவ­சி­யம் என்றும் தேசிய சம்­பள மன்­றம் வலி­யு­றுத்தி இருக்­கிறது.

சிறப்­பா­கச் செயல்­பட்ட நிறு­வனங்­கள், நிச்­ச­ய­மற்ற வணி­கச் சூழல்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தால் மித­மான ஊதிய உயர்வை வழங்­க­லாம் என்­றும் இருப்­பி­னும் அந்­நிறு­வனங்­கள் தங்­க­ளது ஊழி­யர்­களுக்கு மாறு­வி­கித சம்­ப­ளத்­தொகை வழங்க வேண்­டும் என்­றும் நேற்று நடை­பெற்ற 2022, 2023ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊதிய வழி­காட்­டுக் கூட்­டத்­தில் மன்­றம் குறிப்­பிட்­டது.

கொவிட்-19 நோய்த்­தொற்று காலத்­தின்­போது, ​​சில ஊழி­யர்­கள் ஊதி­யக் குறைப்பு, ஊதிய முடக்­கம், நிறு­வ­னச் செல­வுக் குறைப்பு நட­வ­டிக்­கை­கள் போன்­றவற்­றிற்கு ஆளா­கி­னர். நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யில் ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்பு­களை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யி­லும் ஊதிய உயர்வு அமைய வேண்­டும் என்­றும் மன்­றம் தெரி­வித்­தது. பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­கும் ஊழியர் உற்­பத்­தித்­தி­றன் மேம்­பாட்­டிற்­கும் ஏற்ப நியா­ய­மான ஊதிய உயர்வை வழங்­கு­மாறு நிறு­வனங்­களுக்கு மன்­றம் அழைப்பு விடுத்­துள்­ளது.

கடந்த பத்­தாண்­டு­களில் இல்­லாத வகை­யில், சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் இவ்­வாண்டு 6 விழுக்­காடாக உயர்ந்­துள்­ளது. தங்­கு­மி­டம் மற்­றும் தனி­யார் போக்­கு­வ­ரத்­துக்­கான செல­வு­க­ளைத் தவிர்த்த மூலா­தா­ரப் பண­வீக்­கம் இவ்­வாண்டு ஏறத்­தாழ 4 விழுக்­கா­டா­கக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இது சென்ற ஆண்டைவிட 0.9 விழுக்­காடு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த ஊதிய வழி­காட்டி நெறி­மு­றை­கள் வரு­கின்ற டிசம்­பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்­பர் 30ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்தை உள்­ள­டக்­கி­யது.

மேலும், நீக்­குப்­போக்­கான சம்­பள முறையை அமல்­ப­டுத்­தாத அனைத்து நிறு­வ­னங்­களும் இவ்­வாண்டு அதனைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என்­றும் மன்றம் வலி­யுறுத்­தியுள்ளது.

இத­னி­டையே, மன்­றத்­தின் பரிந்­து­ரை­க­ளுக்கு தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. மன்­றத்­தின் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றும்­படி நிறு­வ­னங்­களை என்­டி­யுசி ஊக்­கு­விக்­கிறது.