காதலியை 35 துண்டுகளாக்கி பல இடங்களில் வீசியவர் கைது

2 mins read
c55c3188-fd08-4cbc-82fb-c1eda44c62e5
-

தன்­னு­டன் வசித்து வந்த காத­லியை 35 துண்டு­களாக வெட்டி வீசிய ஆட­வரை டெல்லி காவல்­துறை­ கைது­செய்­த­து.

கடந்த மே 18ஆம் தேதி தங்­க­ளுக்­குள் ஏற்­பட்ட சண்­டைக்­குப்­பின் அஃப்தாப் அமீன் பூன­வாலா என்ற அந்த ஆட­வர், தன் காதலி ஷ்ர­தாவை (படத்­தில் இரு­வ­ரும்) கழுத்தை நெரித்­துக் கொன்­றான். பின்­னர் அவ­ரது உடலை 35 துண்­டு­க­ளாக்­கிய அஃப்தாப், குளிர்­சா­த­னப்­பெட்டி வாங்கி அத­னுள் வைத்­தான்.

அடுத்த 18 நாள்­க­ளாக ஒவ்­வொரு நாளும் பின்­னி­ரவு 2 மணிக்கு வீட்­டை­விட்டு வெளி­யே­றிய அவன், ஷ்ர­தா­வின் உடற்­பாகங்­களை ஒன்­றி­ரண்­டாக நக­ரின் பல பகு­தி­க­ளி­லும் வீசி­யெ­றிந்­த­தாகக் காவல்­துறை தெரி­வித்­தது.

மும்­பை­யி­லுள்ள பன்­னாட்டு நிறு­வ­னம் ஒன்­றின் அழைப்பு மையத்­தில் பணி­பு­ரிந்து வந்­தார் 26 வயது ஷ்ரதா. அங்­கு­தான் அஃப்தாப்பை அவர் முதன்­மு­த­லில் சந்­தித்­தார். அவர்­க­ளுக்கு இடை­யில் காதல் மலர்ந்­தது. அதனை ஷ்ர­தா­வின் பெற்­றோர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அத­னைத் தொடர்ந்து வீட்­டை­விட்டு வெளி­யேறி டெல்லி சென்ற இரு­வ­ரும், அங்கு மெஹ்­ரோலி பகு­தி­யில் ஒரு வீட்­டில் சேர்ந்து வாழத் தொடங்­கி­னர்.

இந்­நி­லை­யில், இம்­மா­தம் 8ஆம் தேதி தம் மக­ளைக் காண்­ப­தற்­காக டெல்லி சென்­ற ஷ்ர­தா­வின் தந்தை விகாஸ் மதான், தம் மகளின் வீடு பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டார்.

பின்­னர் தம் மகள் கடத்­தப்­பட்டு இருக்­க­லாம் என்று மெஹ்­ரோலி காவல் நிலை­யத்­தில் அவர் புகா­ர் அளித்­தார். அதன் அடிப்­ப­டை­யில், காவல்­துறை கடந்த சனிக்­கி­ழமை அஃப்தாப்­பைக் கைது­செய்­தது.

ஷ்ரதா தம்­மைத் திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பி­னார் என்­றும் அதன் தொடர்­பில் தங்­க­ளுக்கு இடையே அடிக்­கடி சண்டை எழுந்­தது என்­றும் காவல்­துறை விசா­ரணை­யின்­போது அஃப்தாப் தெரி­வித்­தான்.

அத­னை­ய­டுத்து, அஃப்தாப்­மீது கொலைக் குற்­றச்­சாட்டு பதி­வு­செய்த டெல்லி காவல்­துறை, ஷ்ர­தா­வின் உடற்­பா­கங்­களைத் தேடி வரு­கிறது.