லீ: உலக உணவு, எரிசக்தி பாதுகாப்புக்கு பரிந்துரைகள்

லீ: உலக உணவு, எரிசக்தி பாதுகாப்புக்கு பரிந்துரைகள்

3 mins read
b40ed3f8-4f34-4df9-be74-7adab1310e1f
பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங். இடப்புறம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், வலப்புறம் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். படம்: இபிஏ -

பாலித் தீவி­லி­ருந்து

இர்­ஷாத் முஹம்­மது

துணைச் செய்தி ஆசி­ரி­யர்

உல­க­ள­வில் உணவு, எரி­சக்தி பிரச்­சி­னை­யைக் கையாள மூன்று பரிந்­து­ரை­களை ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டில் பிர­த­மர் லீ சியன் லூங் முன்­வைத்­துள்­ளார்.

விதி­கள் அடிப்­ப­டை­யி­லான பன்­முனை வணிக முறையை வலுப்­ப­டுத்­து­வது, ஒன்று சேர்ந்து கரி­ய­மில வெளி­யேற்­றத்தை குறைப்­பது, நீடித்த நிலைத்­தன்­மைக்­கான நிதி­யா­த­ரவை அதி­க­ரிப்­பது ஆகிய மூன்று பரிந்­துரை களை அவர் முன்வைத்­தார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் நடந்­து­வ­ரும் ஜி20 மாநாட்டில் உல­கத் தலை­வர்­களிடம் உரை­யாற்­றிய திரு லீ, விதி­கள் அடிப்­ப­டை­யி­லான பல­அடுக்கு அமைப்பு வலுப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அப்­போ­து­தான் அனைத்து நாடு­களும் தடை­யற்ற ­வ­கை­யில் எரி­சக்தி, உணவு, விவசா­யப் பொருள்­களை அனு­ப­விக்க முடி­யும், குறிப்­பாக நெருக்­கடி காலத்­தில் என்று கூறி­னார்.

'ஒன்­றாக மீள்­வோம், வலு­வாக மீள்­வோம்' என்ற கருப்­பொ­ரு­ளில் நடை­பெ­றும் இந்த உச்­ச­நிலை மாநாட்­டில் ஜி20 உறுப்பு நாடுகளும் சிங்­கப்­பூர் உள்ளிட்ட நட்பு நாடு­களும் பங்­கேற்­கின்­றன. சிங்கப்பூர் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இல்லை. எனினும், அதன் கூட்டங்களில் கலந்து கொள்கிறது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில், உணவு, எரி­சக்தி பாது­காப்பு என்ற தலைப்­பில் முதல் கலந்­து­ரை­யாடல் நேற்று காலை நடை­பெற்­றது.

சிறிய தீவான சிங்­கப்­பூர் உணவு, எரி­சக்தித் தேவைகளுக்கு இறக்­கு­ம­தி­யையே நம்பி இருப்­பதால், அதன் மூல­த­னத்தை முறை­யாக நிர்­வ­கிப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை அது நீண்ட காலமாக அறிந்­துள்­ளது என்­றார் திரு லீ.

உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்கி­லியை தங்­கு­த­டை­யில்­லா­ம­லும் வைத்­தி­ருக்க பங்­கா­ளி­களுடன் இணைந்து செயல்­பட விரும்­பு­வ­தாக அவர் சொன்­னார்.

நம்­ப­கத்­தன்­மை­யு­ட­னான தள வாட, போக்­கு­வ­ரத்து, எரி­சக்தி மைய­மாக சிங்­கப்­பூர் அதன் பொறுப்பை சீரிய முறை­யில் மேற்­கொள்­ளும் என்று திரு லீ உறுதி அளித்தார்.

உணவு, எரி­சக்தி பாது­காப்­பில் நீண்ட கால அச்­சு­றுத்­த­லாக பரு­வ­நிலை மாற்­றம் உள்­ளது. வரும் 2050க்குள் கரிமக் கழிவின் பாதிப்பு அறவே இல்லாத நிலையை எட்டும் சிங்­கப்­பூரின் இலக்கை பிரதமர் லீ குறிப்பிட்டுப் பேசினார்.

கரிம வரி­யைக் கணி­ச­மாக அதி­க­ரிப்­பது, எரி­சக்தி துறை­யின் பசு­மைப் புரட்­சிக்கு தேசிய ஹைட்­ர­ஜன் உத்­தியை செயல்­படுத்­து­வது, ஆசி­யா­னு­டன் இணைந்து வட்­டார எரி­சக்தி தொடர்பு கட்­ட­மைப்­பை­யும் பாது­காப்­பை­யும் மேம்­ப­டுத்­து­வது ஆகி­யவை குறித்து விளக்­கி­னார்.

பசுமை எரி­சக்­திக்கு மாறு­வதற்கு நாடு­க­ளுக்கு நிதி தேவைப்­படும் என்­ப­தால் அதற்­கான ஆத­ர­வுத் திட்­டங்­கள் உரு­வா­க­வேண்­டும் என்­றார் திரு லீ.

ஆசிய மேம்­பாட்டு வங்­கி­யின் எரி­சக்தி மாற்­றுத் திட்­டத்தை மேற்­கோள் காட்­டிப் பேசிய அவர், தனி­யார் துறை முத­லீ­டு­களும் தேவை என்­ப­தைச் சுட்­டி­னார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தைச் சமா­ளிப்­ப­தற்­கா­ன ஆசிய தீர்­வு­கள் வடி­வ­மைப்பு மானி­யத்தை சிங்கப்­பூர் நாணய ஆணை­யம் உரு­வாக்­கி­யுள்­ள­தைச் சுட்­டிய திரு லீ, நீடித்த நிலைத்­தன்­மை­யு­ட­னான உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­களில் தனி­யார் துறையின் பங்­க­ளிப்­புக்கு இது ஓர் எடுத்­துக்­காட்டு என்றார்.

இருதரப்புச் சந்­திப்புகள்

ஜி20 உச்­ச­நிலை மாநாட்டு கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு இடையே இரு­த­ரப்பு சந்­திப்­பு­க­ளை­யும் பிர­தமர் லீ மேற்கொண்டார்.

ஸ்பெ­யின் நாட்­டின் பிர­த­மர் பெட்ரோ சான்­செசுடன் மின்­னிலக்­க­ம­யம், அறி­வார்ந்த நகர மேம்­பாடு உள்­ளிட்ட அம்­சங்­களில் ஒத்­து­ழைப்பை மேலும் ஆழ­மாக்கு­வது குறித்து பிரதமர் லீ பேச்சு நடத்தினார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டெயுடன் சந்திப்பு நடத்திய திரு லீ, வட்டார, உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பேசியதாகக் கூறினார்.