சிங்கப்பூர் எல்லையில் நிகழக்
கூடிய அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைளில் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமே ஈடுபடும். 2023 ஜனவரி 3 முதல் இது நடப்புக்கு வருகிறது. உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் வெடிகுண்டு மிரட்டல், ஆயுதம் தாங்கிய தாக்குதல் போன்ற சம்பவம் நிகழ்ந்தால் அவற்றை முறியடிக்கும் முயற்சிகளை ஆணையமே முதலில் கையாளும்.
சிங்கப்பூரின் எல்லைகளில் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் பலப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் அச்சுறுத்தல்களை விரைந்து கையாளமுடியும். காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை போன்ற இதர ஆதரவுப் படையினர் வந்து சேரும் வரை காத்திருக்க வேண்டி இருக்காது.
இப்போதைய நிலையில், இந்த இரு பகுதிகளிலும் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்
துறையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து கவனித்து வருகின்றன. தற்போது குடிநுழைவு தொடர்பான பணி
களிலும் சரக்குகளைச் சோதனையிடுவதிலும் ஆணைய அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
அடுத்த ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்பையும் அவர்கள் முழுமையாகக் கையில் எடுத்துக்கொள்வார்கள் என்று ஆணையத்தின் மூத்த துணை ஆணையாளர் சுவா துவான் மெங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சம்பவங்களின்போது மேலும் ஆற்றலுடன் தலையிட அதிகாரிகளுக்கு போதுமான திறன்களும் அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாதுகாப்பு நெருக்கடியின்போது பணியாற்றுவது எவ்வாறு என்பதை இதர உள்துறைக் குழுவினருடன் இணைந்து ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் செய்து காட்டினர். துவாஸ் சோதனைச் சாவடியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை சட்ட உள்துறை அமைச்சர் கா சண்முகம் உள்துறைக் குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
இவ்விரு சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு சம்பவங்களைக் கையாள தொழில்நுட்பங்களை குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் பயன்
படுத்துகின்றனர்.
காணொளி பகுப்பாய்வுகளையும் நேரலையாகத் தொடர்ந்து கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பத்தையும் அவர்கள் கையாள்கின்றனர். ஆயுதந்தாங்கிய தாக்குதல்
களையும் வெடிகுண்டு மிரட்டல்
களையும் சமாளிக்கத் தேவையான உத்திகளும் கருவிகளும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தச் சாவடிகளிலுள்ள ஆணைய அதிகாரி
களுக்குத் தரப்பட்டு வருகின்றன.
உள்துறைக் குழு அறிவியல் தொழில்நுட்ப முகவையுடன் தற்காப்பு அறிவியல் தொழில்நுட்ப முகவை இணைந்து உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதற்கு முன்னர், கைவிடப்பட்ட வாகனங்களையும் கேட்பாரற்றுக் கிடக்கும் பைகளையும் அடையாளம் காண கண்காணிப்புக் கருவி களை எவ்விதத் தொழில்நுட்ப உதவியும் இன்றி அதிகாரிகள் பயன்படுத்தும் நிலை இருந்தது.

