தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதற்கட்ட எல்லைப் பாதுகாப்பை குடிநுழைவு ஆணையம் கையாளும்

2 mins read
cb4ec5b9-b92b-40c5-8987-98851d1e29ea
துவாஸ் சோதனைச் சாவடியில் நடைபெற்ற பயிற்சியைப் பார்வையிட வந்த சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் அங்கிருந்த அதிகாரி களுடன் உரையாடினார். படம்: குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் -

சிங்­கப்­பூ­ர் எல்­லை­யில் நிக­ழக்­

கூ­டிய அச்­சு­றுத்­தல்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கான முதற்­கட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­ளில் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யமே ஈடு­படும். 2023 ஜன­வரி 3 முதல் இது நடப்­புக்கு வரு­கிறது. உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச் சாவ­டி­களில் வெடி­குண்டு மிரட்­டல், ஆயு­தம் தாங்­கிய தாக்­கு­தல் போன்ற சம்­ப­வம் நிகழ்ந்­தால் அவற்றை முறி­ய­டிக்­கும் முயற்­சி­களை ஆணை­யமே முத­லில் கையா­ளும்.

சிங்­கப்­பூ­ரின் எல்­லை­களில் பாது­காப்­பை­யும் கட்­டுப்­பாட்­டை­யும் பலப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­படும் இந்த நட­வ­டிக்­கை­யால் அச்­சு­றுத்­தல்­களை விரைந்து கையா­ள­மு­டி­யும். காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை போன்ற இதர ஆத­ர­வுப் படை­யி­னர் வந்து சேரும் வரை காத்­தி­ருக்க வேண்டி இருக்­காது.

இப்­போ­தைய நிலை­யில், இந்த இரு பகு­தி­க­ளி­லும் எல்­லைப் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளை­யும் காவல்

­து­றை­யும் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­ய­மும் இணைந்து கவ­னித்து வரு­கின்­றன. தற்­போது குடி­நு­ழைவு தொடர்­பான பணி­

க­ளி­லும் சரக்­கு­க­ளைச் சோத­னை­யி­டு­வ­தி­லும் ஆணைய அதி­கா­ரி­கள் ஈடு­ப­டு­கி­றார்­கள்.

அடுத்த ஆண்டு முதல் எல்லைப் பாது­காப்­பை­யும் அவர்­கள் முழு­மை­யா­கக் கையில் எடுத்­துக்­கொள்­வார்­கள் என்று ஆணை­யத்­தின் மூத்த துணை ஆணை­யா­ளர் சுவா துவான் மெங் தெரி­வித்­துள்­ளார்.

பாது­காப்பு சம்­பந்­தப்­பட்ட சம்­ப­வங்­க­ளின்­போது மேலும் ஆற்­ற­லு­டன் தலை­யிட அதி­கா­ரி­க­ளுக்கு போது­மான திறன்­களும் அதி­கா­ரங்­களும் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

பாது­காப்பு நெருக்­க­டி­யின்­போது பணி­யாற்­று­வது எவ்­வாறு என்­பதை இதர உள்­து­றைக் குழு­வி­ன­ரு­டன் இணைந்து ஆணைய அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் செய்து காட்­டி­னர். துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் இந்­தப் பயிற்சி நடை­பெற்­றது.

இந்­தப் பயிற்­சியை சட்ட உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் உள்­து­றைக் குழுக்­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் பார்­வை­யிட்­ட­னர்.

இவ்­விரு சோத­னைச் சாவ­டி­க­ளி­லும் பாது­காப்பு சம்­ப­வங்­க­ளைக் கையாள தொழில்­நுட்­பங்­களை குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­கள் பயன்­

ப­டுத்­து­கின்­ற­னர்.

காணொளி பகுப்­பாய்­வு­க­ளை­யும் நேர­லை­யா­கத் தொடர்ந்து கண்­கா­ணிக்­கக்­கூ­டிய தொழில்­நுட்­பத்­தை­யும் அவர்­கள் கையாள்­கின்­ற­னர். ஆயு­தந்­தாங்­கிய தாக்­கு­தல்­

க­ளை­யும் வெடி­குண்டு மிரட்­டல்­

க­ளை­யும் சமா­ளிக்­கத் தேவை­யான உத்­தி­களும் கரு­வி­களும் கடந்த பிப்­ர­வரி மாதம் முதல் இந்­தச் சாவ­டி­க­ளி­லுள்ள ஆணைய அதி­கா­ரி­

க­ளுக்­குத் தரப்­பட்டு வரு­கின்­றன.

உள்து­றைக் குழு அறி­வி­யல் தொழில்­நுட்ப முக­வை­யு­டன் தற்­காப்பு அறி­வி­யல் தொழில்­நுட்ப முகவை இணைந்து உரு­வாக்­கி­யுள்ள தொழில்­நுட்­பங்­களை அவர்­கள் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.

இதற்கு முன்­னர், கைவி­டப்­பட்ட வாக­னங்­க­ளை­யும் கேட்­பா­ரற்­றுக் கிடக்­கும் பைக­ளை­யும் அடை­யா­ளம் காண கண்­கா­ணிப்­புக் கருவி­ களை எவ்­வி­தத் தொழில்­நுட்ப உத­வி­யும் இன்றி அதி­கா­ரி­கள் பயன்­ப­டுத்­தும் நிலை இருந்­தது.