மாநாட்டின் முடிவில் உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்கு வலுவான எதிர்ப்பு இடம்பெற்று இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஒன்றுகூடி, பேசி, காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் கூட்டறிக்கையை தயாரித்துள்ளனர். இது இந்தோனீசிய தலைமைத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறினார். தொடக்கத்தில் பலர் கூட்டறிக்கை வெளிவருமா என்ற சந்தேகத்தை எழுப்பியதை அவர் குறிப்பிட்டார். போலந்தில் புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததன் எதிரொலியாக அந்தக் கூட்டறிக்கை வெளிவந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜி20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ளது. நட்பு நாடாக சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் லீ. இரு நாடுகளுக்கும் இடையில் மின்னி லக்கமயம், எரிசக்திப் பாது காப்பு உள்ளிட்ட புதிய அம்சங்களில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் இரு பிரதமர்களும் கலந்துரையாடினர்.

