போலந்து தாக்குதல்: நேட்டோ புதிய தகவல்

போலந்து தாக்குதல்: நேட்டோ புதிய தகவல்

2 mins read

உக்­ரேன் எல்லை அருகே போலந்து கிரா­மத்­தில் ரஷ்ய ஏவு­கணை தாக்­கி­ய­தில் இரண்டு பேர் உயி­ரி­ழந்­த­தாக கீவ் நக­ர் தீய­ணைப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இருப்­பி­னும் இந்­தத் தக­வல் உறு­தி­யா­னதா என்­பது குறித்து அமெ­ரிக்­கா­வும் மேற்­கத்திய நட்பு நாடு­களும் விசா­ரணை நடத்தி வரு­கின்­றன. ஏவு­

க­ணையை ரஷ்யா ஏவி­யி­ருப்­ப­து­போ­லத் தெரி­ய­வில்லை என அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறினார்.

அவரது கூற்றையொட்டி நேற்று மாலை போலந்தும் நேட்டோவும் கருத்துத் தெரிவித்தன. இது ரஷ் யாவின் தாக்குதல் அல்ல என்றும் உக்ரேன் வீசிய ஏவுகணை திசை மாறி போலந்துக்குள் சென்றிருக் கலாம் என்றும் அவை கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் ஜி20 மாநாட்­டில் பங்­கேற்­ற திரு பைடன், போலந்து மீது தாக்கு­ தல் நடத்­தப்­பட்ட தக­வல் தொடர்­பாக நடைபெற்ற அவ­ச­ரக் கூட்­டத்­தில் உரை­யாற்­றி­னார். போலந்து மீது ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக வெளி­யாகி இருக்­கும் ஆரம்­பக்­கட்ட தக­வலை மட்­டும் வைத்து எத­னை­யும் உறுதி செய்­வ­தற்­கில்லை என்று அப்­போது அவர் குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுப்­பைத் தொடங்கி ஒன்­பது மாதங்­கள் ஆகும் நிலை­யில் கீவ் நக­ரில் கடு­மை­யான ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­யது.

அப்­போது போலந்து­ கிராமம் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என்ற தக­வல் வெளி­யா­னது.

உக்­ரேன்-போலந்து எல்­லை­யி­லி­ருந்து 80 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள மேற்கு உக்­ரேன் நக­ரான லெவிவ் மீதும் ரஷ்ய ஏவு

கணை­கள் தாக்­கி­ய­தாக செய்­தி­கள் வெளி­யா­யின. அப்­போது எல்­லை­யி­லி­ருந்து 6 கிலோ­மீட்­டர் தொலை­விலுள்ள கிழக்கு போலந்து கிரா­ம­மான ஸெவோ­டோ­வில் தானி­யம் உலர்த்­தும் பகு­தி­யில் வெடிப்பு நிகழ்ந்­த­தா­க­வும் செய்­தி­கள் தெரி­வித்­தன. நேட்டோ மேற்­கத்­திய ராணு­வக் கூட்­ட­மைப்­பில் போலந்து அங்­கம் வகிக்­கிறது.

எனவே போலந்­தைத் தற்­காக்­கும் பொறுப்பு நேட்­டோ­வுக்கு உண்டு. வெடிப்பு தொடர்­பான விசா­ர­ணை­யில் போலந்து­டன் இணைந்து செயல்ப­டு­வ­தாக நேட்டோ தெரி­வித்­தது. நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக ஜெர்­மனி, கனடா போன்­ற­வை­ தெரி­வித்­தன.