அன்வார்: நான் பிரதமரானால்...

அன்வார்: நான் பிரதமரானால்...

1 mins read

நடக்க இருக்­கும் தேர்­த­லில் வெற்­றி­பெற்று பிர­த­மர் பொறுப்பை தாம் ஏற்­றால் தமது அமைச்­ச­ர­வை­யில் உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் தாம் பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் தமது அமைச் சர்களின் சொத்து விவ­ரங் களை வெளி­யிட உத்­த­ர­வி­டப்­போ­வ­தாக மலே­சி­யா­வின் பிர­தான எதிர்த்­த­ரப்புத் தலை­வ­ரான அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்துள்­ளார். "சொத்து விவ­ரங்­களை வெளி­யிட மறுப்­போர் அமைச்­ச­ர­வை­யில் இருந்து வெளி­யேற்­றப்ப­டு­வார்­கள். இது எனது வாக்குறுதி," என்­று அவர் தமது பிர­சா­ரத்­தின்­போது கூறி­னார். வாக்­க­ளிக்­கச் செல்­லும்­போது வேட்­பா­ளர்­க­ளின் வசதி வாய்ப்­பு­க­ளை­யும் அவர்­க­ளின் பின்­ன­ணி­யை­யும் ஆராய்­வது வாக்காளர்களுக்கு முக்­கி­யம் என்­றார் அவர்.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் அனைத்து வேட்­பா­ளர்­களும் தங்­க­ளது சொத்து விவ­ரங்­களை வெளி­யிட வேண்­டும். ஆனால், சில வேட்­பா­ளர்­க­ளின் பண­ப­ல பின்­னணி குறித்து யாருக்­கும் எது­வும் தெரி­வ­தில்லை என்­றார் திரு அன்­வார்.