இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்திய குற்றச்சாட்டை முன்னாள் விரிவுரையாளர் ஒப்புக்கொண்டார்

இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்திய குற்றச்சாட்டை முன்னாள் விரிவுரையாளர் ஒப்புக்கொண்டார்

2 mins read
91cc7059-2108-4f90-83cd-a6f0490f0b0e
நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் விரிவுரையாளர் டான் பூன் லீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் விரிவுரையாளர், பல இனத் தம்பதிக்கு எதிராக 2021ல் இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்திய குற்றத்த்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்தச் சம்பவத்தின் காணொளி அச்சமயத்தில் பரவலாகப் பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியது.

டான் பூன் லீ, 61, ஒருவரின் இனம் சார்ந்த தனிப்பட்ட உணர்வுகளைக் காயப்படுத்திய ஒரு குற்றச்சாட்டையும் ஆபாசப் படங்களை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, சிங்கப்பூரரான டான், ஆர்ச்சர்ட் ரோட்டில் 26 வயது திரு தேவ் பிரகாஷை நோக்கி இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

டான் அப்போது நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியின் பொறியியல் துறையில் விரிவுரையாளராகப் வேலை செய்து வந்தார்.

இந்திய, ஃபிலிப்பீன்ஸ் வம்சாவளிகளைச் சேர்ந்த திரு பிரகாஷுடன், சீன-தாய்லாந்து வம்சாவளிகளைச் சேர்ந்த அவரது காதலி குமாரி ஜாக்குவலின் ஹோ உடன் இருந்தார்.

ஆர்ச்சர்ட் பொலிவார்டில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் இருவரும் நடந்துகொண்டிந்தனர். எதிரில் சென்ற டான், சீனப் பெண்ணுடன் இந்திய ஆடவர் இருப்பது அவமானம் என்றார்.

திரு பிரகாஷுக்கும் டானுக்கும் இடையிலான ஒன்பது நிமிட வாக்குவாதத்தை குமாரி ஹோ கைபேசியில் பதிவு செய்தனர்.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளி தீபோல பரவியது. அதில் திரு பிரகாஷை நோக்கி பல்வேறு இனவாதக் கருத்துகளை டான் வெளிப்படுத்தினார்.

சுமார் ஒரு மாதம் கழித்து, தமது கருத்துகளுக்காக டான் ஃபேஸ்புக்கில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, அவரது கைபேசியில் காவல்துறையினர் 64 ஆபாசப் படங்களைக் கண்டுபிடித்தனர்.

டானுக்கு நான்கு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் டானுக்கு, சிறி குற்றங்களுக்கான சமூக

அடிப்படையிலான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் யுஜீன் துரைசிங்கம் வாதிட்டார்.

டானுக்கு டிசம்பர் 29ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.