சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் நேரடிச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் ஏபெக் தலைவர்கள் மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் இன்று மாலை சந்தித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அணுக்கமான, பன்முனை உறவை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலிலும் உலகளாவிய சவால்கல் மாறியபோதும் சிங்கப்பூரும் சீனாவும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதாக இரு தலைவர்களும் கூறினர்.
பிரதமர் லீயின் பத்திரிகை செயலாளர் சாங் லி லின் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
சந்திப்பின்போது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் உடன் இருந்தனர்.

