தடையற்ற, வெளிப்படையான வர்த்தகம் தொடர வலியுறுத்து

தடையற்ற, வெளிப்படையான வர்த்தகம் தொடர வலியுறுத்து

2 mins read
4aa4d0e9-9c5c-49f2-94d2-e95804dfabdd
பேங்காக்கில் நடைபெறும் 'ஏபெக்' தலைவர்களுக்கான 29வது கூட்டத்தில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை (வலது)பிரதமர் லீ சியன் லூங் நேற்று சந்தித்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

பிரதமர் லீ: தன்னிறைவு பெற்றிருப்பதாக எந்தப் பொருளியலும் கருதவில்லை

தாய்­லாந்­துத் தலை­ந­கர் பேங்­காக்­கில் நடை­பெ­றும் 'ஏபெக்' எனப்­படும் ஆசிய-பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­புக்­கான உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொண்ட பிர­தமர் லீ சியன் லூங், தடை­யற்ற, வெளிப்­ப­டை­யான வர்த்­த­கம் தொட­ர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

உல­கின் எந்­தப் பொரு­ளி­ய­லும் முழு­மை­யா­கத் தன்­னி­றைவு அடைந்­து­விட்­ட­தாக நம்­பிக்­கை­கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை கொவிட்-19 கிரு­மிப் பர­வல் உணர்த்­தி­யி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

உல­கப் பொரு­ளி­யல் சூழ­லில் நிலை­யற்­ற­தன்மை தொட­ரும் வேளை­யில் 'ஏபெக்' நாடு­கள் நீடித்த நிலைத்­தன்­மை­யு­டன்­கூ­டிய, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சிக்கு இணைந்து பணி­யாற்­று­வது அவ­சி­யம் என்­றார் திரு லீ.

'ஏபெக்' நாடு­க­ளின் தலை­வர்­களுக்­கான 29வது சந்­திப்­பில் அவர் உரை­யாற்­றி­னார்.

புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், பண­வீக்­கம், விநி­யோ­கச் சங்­கி­லி­யில் இடை­யூறு போன்­ற­வற்­றால் புதி­தாக ஏற்­பட்­டுள்ள சிக்­கல்­களைக் குறிப்­பிட்ட பிர­த­மர், இவற்­றால் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களும் சிறிய, நடுத்­தர நிறு­வனங்­களும் கடு­மை­யாக பாதிக்­கப்­படும் என்­றார்.

'ஏபெக்' விநியோ­கச் சங்­கி­லித் தொடர்­புக் கட்­ட­மைப்­புத் திட்­டத்தை சிங்­கப்­பூர் தொடர்ந்து வழி­ந­டத்­தும் என்று கூறிய அவர், 'ஏபெக்' நாடு­கள் மீள்­தி­ற­னை­யும் வெளிப்­ப­டை­யான விநி­யோ­கத்­தை­யும் மேம்­ப­டுத்­து­வ­தில் இணைந்து செய­லாற்­ற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

'ஏபெக்' அமைப்­பில் 21 நாடு­கள் பங்­கு­பெ­று­கின்­றன. உல­கின் மொத்த வர்த்­த­கத்­தில் இவற்­றின் பங்கு 50 விழுக்­காடு. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 60 விழுக்­காடு இந்த நாடு­க­ளைச் சேர்ந்­தது.

"விநி­யோ­கச் சங்­கிலி செயல்­தி­றன், தொடர்பு, நிலைத்­தன்மை ஆகி­ய­வற்­றுக்கு ஆத­ரவு தரும் சூழலை உரு­வாக்­க­வும் இதில் ஏற்­ப­டக்­கூ­டிய சிக்­கல்­க­ளுக்­குத் தீர்­வு­கா­ண­வும் 21 நாடு­களும் கூட்­டா­கச் செயல்­ப­டு­வது அவ­சி­யம். மேலும், தொழில்­நுட்­பம், திறன் மேம்­பாடு போன்ற அம்­சங்­களில் சிறப்­புற, தனி­யார் துறை­யு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தும் முக்­கி­யம்," என்று திரு லீ விளக்­கி­னார்.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வல் மின்­னி­லக்­க­ம­ய­மா­தலை விரை­வு­ப­டுத்­தி­னா­லும் அனைத்­து­ல­கக் கட்­டுப்­பா­டு­க­ளால் பின்­ன­டைவு ஏற்­பட்­டது," என்­றார் அவர்.

"ஆஸ்­தி­ரே­லியா, சிலி, தென்­கொ­ரியா, நியூ­சி­லாந்து போன்ற 'ஏபெக்' நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் உடன்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்­டுள்­ளது. மின்­னி­லக்­கச் செயல்­பாட்­டால் உற்­பத்­தித் திறன் அதி­க­ரிப்­ப­து­டன் வர்த்­த­கச் செல­வு­கள் குறை­யும்," என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

பொரு­ளி­யல் வளர்ச்­சி­யால் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் நன்­மை­ய­டை­வதை உறு­தி­செய்­யும் வகை­யில் சமூ­கங்­க­ளின் வளர்ச்சி சம­நி­லை­யு­டன் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்கி இருத்­தல் அவ­சி­யம் என்று திரு லீ வலி­யு­றுத்­தி­னார்.

இது­வரை 150,000க்கு மேலான வெளி­நாட்டு அதி­கா­ரி­க­ளு­டன் சிங்­கப்­பூர் அதன் மேம்­பாட்டு அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டதைப் பிரதமர் சுட்­டி­னார்.

கூட்டத்த்தைத் தொடங்­கி­வைத்­துப் பேசிய தாய்­லாந்­துப் பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா, பரு­வ­நிலை மாற்­றம் உல­கிற்கு அச்­சு­றுத்­த­லாக விளங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அதன் தாக்­கத்­தைத் தணிக்க 'ஏபெக்' நாடுகள் கூட்­டாக முய­ல­வேண்­டும் என வலி­யு­றுத்­திய அவர், அதில் கவனம் செலுத்தாமல் அவ­ர­வரின் தற்போதைய வேலை­களைத் தொடர்­வது நல்­லதல்ல என்­றார்.