பீச் ரோடு மாது மரணம்: உடன் பணிசெய்த ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு

பீச் ரோடு மாது மரணம்: உடன் பணிசெய்த ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு

2 mins read
6ea9e8cd-9405-4a6f-b6de-97e29ccc4921
உயிரிழந்த மாது ஆங் சி யிங் (இடது), கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள கேலப் ஜோஷுவா சாய் சண்முகம். படங்கள்: ஃபேஸ்புக், சிங்கப்பூர் காவல்துறை -
multi-img1 of 2

இம்­மா­தம் 9ஆம் தேதி இரவு 7 மணிவாக்­கில், புளோக் 2, பீச் ரோட்­டில் அமைந்­துள்ள கீழ்த்­த­ளக் கடை­யில் 27 வயது ஆங் சி யிங்­கைக் கொலை செய்­த­தாக, கேலப் ஜோஷுவா சாய் சண்­மு­கம் எனும் 50 வயது ஆட­வர்­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

காணா­மற்­போ­ன­தா­கப் புகா­ர் அளிக்­கப்­பட்­டி­ருந்த திரு­வாட்டி ஆங் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை சம்­பவ இடத்­தில் மாண்­டு­கி­டக்­கக் காணப்­பட்­டார்.

கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் பதி­வு­களில் இருந்து உயி­ரி­ழந்த மாதும் இந்த ஆட­வ­ரும் 'ஸ்மார்ட் கிளிக் சர்­விசஸ்' எனும் புதுப்­பிப்பு நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

பெனின்­சுலா பிளாசா முக­வ­ரி­யில் செயல்­படும் இந்­நி­று­வ­னத்­திற்கு சிங்­கப்­பூ­ரர்­க­ளான இவ்­விரு­வ­ரும் சென்ற ஆண்டு அக்­டோ­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து இயக்­கு­நர்­கள் எனப் பதி­வு­ செய்­யப்­பட்­டு உள்­ளது.

முன்­ன­தாக, பீச் ரோடு கடை­யில் இயற்­கைக்கு மாறான மரண சம்­ப­வம் குறித்­துத் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது. உயி­ரி­ழந்த பெண், இம்­மா­தம் 10ஆம் தேதி காணா­மற்­போ­ன­தா­கப் புகார் அ­ளிக்­கப்­பட்ட பெண் எனக் கண்­ட­றி­யப்­பட்­ட­து­டன் இந்த சம்­ப­வத்­தில் 50 வயது ஆட­வ­ருக்­குத் தொடர்­பி­ருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர். ஆனால், ஆட­வர் இம்­மா­தம் 10ஆம் தேதி மலே­சியா சென்­று­விட்­ட­தால் அரச மலே­சியக் காவல்­ப­டை­யின் உதவி நாடப்­பட்­டது.

சென்ற புதன்­கி­ழமை ஜோகூ­ரில் மலே­சிய அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்ட சாய், சிங்­கப்­பூர் காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

இம்­மா­தம் 9ஆம் தேதி முதல் திரு­வாட்டி ஆங்­கைக் காண­வில்லை என்­றும் அவ­ரைப் பற்­றிய தக­வல் கிடைத்­தால் பகி­ரும்­ப­டி­யும் ஆங்­கின் குடும்­பத்­தி­ன­ரும் நண்­பர்­களும் சமூக ஊட­கங்­கள் மூலம் கேட்­டுக்­கொண்­ட­னர்.

இம்­மா­தம் 9ஆம் தேதி, தான் வீடு திரும்­பப் போவ­தில்லை எனக் கூறும் குறுஞ்­செய்­தி­யைத் திரு­வாட்டி ஆங் தன் தாயா­ருக்கு அனுப்­பி­யி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சென்ற செவ்­வாய்க்­கி­ழமை மண்­டாய் தக­ன­சா­லை­யில் அவ­ரது இறு­திச் சடங்­கு­கள் நடை­பெற்­றன.

சாய் மீது சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் கொலைக்­குற்­றம் சாட்­டப்­பட்­ட­தாக அவ­ரது வழக்­கறி­ஞர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

சாய் ஏன் மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கி­றார் என்­பது குறித்­துத் தக­வல் இல்லை என்று அந்த வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

இவ்­வ­ழக்கு இம்­மா­தம் 25ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. சிங்­கப்­பூர் சட்­டத்­தின்­கீழ், கொலைக்­குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் மரண தண்­டனை விதிக்­கப்­படும்.