மலேசியாவில் 15வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிந்துவிட்டது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அங்குள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 220க்கும் 117 சட்டமன்றத் தொகுதிகளில் 116க்கும் வாக்களிப்பு நடந்தது.
இந்தத் தேர்தலில் சுமார் 21 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் சுமார் நான்கு மில்லியன் பேர் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
கெடாவில் உள்ள பாடாங் செராய் தொகுதியின் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம் கருப்பையா புதன்கிழமை காலமானார்.
தியோமான் தொகுதியில் பெரிக்கட்டான் கட்சி வேட்பாளர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
அதனால் இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பின்னர் நடைபெறவுள்ளது.
பெரிசான் நேஷனல் எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டணி, பக்கத்தான் ஹரப்பான், பெரிக்கத்தான் ஆகிய முக்கிய கூட்டணிகள் களத்தில் உள்ளன.
இன்று நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சில தரப்புகள் கூறின.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று கணிப்புகள் சொல்வதால், முடிவுகள் வெளிவரத் தாமதம் ஆகலாம்.

