முனைப்புடன் வாக்களித்த மலேசிய இந்தியர்கள்

முனைப்புடன் வாக்களித்த மலேசிய இந்தியர்கள்

1 mins read
edee8f6a-5c7d-4bd0-8344-1fa52e6d2847
கோலாலம்பூரில் வாக்களித்த உடன்பிறப்புகள். (இடமிருந்து) ஷாலினி தேவி கிருஷ்ணன், கணேஷ் குமார், திவ்யக்கரசி. சுந்தர தர்ஷினி. படம்: தி ஸ்டார் -

மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில் அந்­நாட்­டைச் சேர்ந்த இந்­தி­யர்­கள் குடும்­பம் குடும்­ப­மாய் வாக்­க­ளித்­த­னர்.

18 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட பல இந்­திய இளை­யர்­கள் நேற்று முதல்­மு­றை­யாக, மிகுந்த ஆவ­லு­டன் வாக்­க­ளித்­த­னர்.

கோலா­லம்­பூ­ரின் பத்து தொகுதி ­யில் உடன்பிறப்புகளான ஷாலினி தேவி கிருஷ்­ணன், கணேஷ் குமார், திவ்­யக்­க­ரசி, சுந்­தர தர்­ஷினி தங்­கள் ஜன­நா­யகக் கடமையை நிறை­வேற்­றி­னர்.

போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களில் நாட்டை வழி­ந­டத்­தும் ஆற்­ற­லும் தகு­தி­யும் யாருக்கு இருக்­கிறது என்­பதை நன்கு ஆராய்ந்து, கலந்­து­ரை­யா­டிய பிறகே வாக்­க­ளிப்பு மையத்­துக்­குச் சென்று வாக்­க­ளித்­த­தாக அவர்கள் தெரி­வித்­த­னர்.