10ல் போட்டி;
9ல் தேர்தல்;
8ல் தோல்வி;
1ல் வெற்றி
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் அணியில் 10 இடங்களில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) போட்டியிட்டது. அதில் ஒன்பது தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது.
சுங்கை சிப்புட், தாப்பா, உலு சிலாங்கூர், தெலுக் இந்தான், கோலா லாங்காட், போர்ட் டிக்சன், பத்து, பாடாங் செராய், சிகாமாட், கோத்தா ராஜா ஆகியவை அந்தப் பத்து தொகுதிகள். அவற்றில் பாடாங் செராய் தவிர இதர ஒன்பது தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பாடாங் செராய் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடந்த தொகுதிகளில் தாப்பாவில் மட்டும் மஇகா துணைத் தலைவரான எம். சரவணன் வெற்றி வாகை சூடினார்.

