மேற்கு ஜாவாவில் நிலநடுக்கம்: 56 பேர் மரணம்; 700 பேர் காயம்

மேற்கு ஜாவாவில் நிலநடுக்கம்: 56 பேர் மரணம்; 700 பேர் காயம்

2 mins read
6060dc2f-6971-4d0c-8758-a217ed1f1b11
சியாஞ்சுரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் மாண்ட சிறுமியின் உடலையும் காப்பாற்றப்பட்ட சிறுவனையும் தூக்கிச் சென்ற அவசர உதவிப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

சியாஞ்­சுர்: இந்­தோ­னீ­சி­யா­வின் மேற்கு ஜாவாவை நேற்று உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தில் குறைந்­தது 56 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் 700 பேர் வரை காய­முற்­ற­தா­க­வும் கூறப்­பட்­டது. மேற்கு ஜாவா ஆளு­நர் ரிட்­வான் கமில் நேற்று மாலை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அதைத் தெரி­வித்­தார்.

ரிக்­டர் அள­வில் 5.6 என நில­ந­டுக்­கம் பதி­வா­னது. பல கட்­ட­டங்­கள் சேத­முற்­ற­து­டன் தலை­ந­கர் ஜகார்த்தா வரை நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­டன.

கட்­டட இடி­பா­டு­களில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி நடை­பெற்று வரு­கிறது. அத­னால் மாண்­ட­வர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மேற்கு ஜாவா­வின் சியாஞ்­சுர் எனும் பகு­தி­யில் இந்­தோ­னீ­சிய நேரப்­படி பிற்­ப­கல் 1.21 மணிக்கு (சிங்­கப்­பூர் நேரப்­படி பிற்­ப­கல் 2.21 மணி) நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது.

பத்து முதல் 15 வினா­டி­கள் வரை வலு­வான நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­ட­தால், மக்­கள் பீதி­ய­டைந்து வீடு­களை விட்டு வெளி­யே­றி­னர். சமூக ஊட­கங்­களில் வலம் வந்த காணொ­ளி­கள், மக்­கள் பீதி­ய­டைந்து அல­றி­ய­தைக் காட்­டின. சில­ருக்கு தலை­யில் ஏற்­பட்ட காயத்­தால் ரத்­தம் வழிந்­தது. பல வீடு­களும் கட்­ட­டங்­களும் இடிந்து விழுந்­தன.

300க்கும் மேற்பட்ட வீடு­கள் சேத­ம­டைந்­த­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் பேரி­டர் மேலாண்மை அமைப்பு கூறி­யது. நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட சியாஞ்­சுர் மக்­கள் நெரி­ச­லாக வாழு­மி­டம் ஆகும். வலு­வில்லா கட்­ட­டங்­கள் நிறைந்த அப்­ப­கு­தி­யில் அடிக்­கடி நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­படும் என்­றும் கூறப்­பட்­டது.

மேற்கு ஜாவா­வில் சுக்­கா­புமி, போகோர், பாண்­டுங் உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­டன. கட்­ட­டங்­கள் குலுங்­கு­வ­தை­யும் அறை­க­லன்­கள் நகர்­வ­தை­யும் தாங்­கள் உணர்ந்­த­தாக சில ஜகார்த்­தா­வா­சி­கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னர்.