அர்ஜெண்டினாவை அடக்கி அதிர்வலை ஏற்படுத்திய சவூதி

1 mins read
af66e91f-d701-40b6-bed0-dc62ecfd3170
சவூதி அரேபியாவின் இரண்டாவது கோல் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க அர்ஜெண்டினா கோல்காப்பாளர் எமிலியானோ பாய்ந்தும் பலனில்லாமல் போனது.படம்: ராய்ட்டர்ஸ் -

உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் எதிர்பாராத ஒன்று நேற்று நடந்தது.

காற்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒன்றான அர்ஜெண்டினாவை 2-1 எனும் கோல் கணக்கில் சவூதி அரேபியா தோற்கடித்தது.

யாரும் நினைத்துக்கூட பார்த்திராத இந்த முடிவு போட்டியில் களமிறங்கியுள்ள குழுக்களை மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் கோலாக்கினார். முற்பாதி முடிவதற்குள் பந்தை இருமுறை வலைக்குள் சேர்த்தது அர்ஜெண்டினா. ஆனால் ஆஃப்சைட் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டன.

பிற்பாதியில் சவூதி சக்கைபோடு போட்டது. 48வது நிமிடத்தில் அல் ஷெரியும் 53வது நிமிடத்தில் அல் டோசரியும் கோல் போட்டனர்.