மின்னிலக்கம், பசுமை, பராமரிப்புத் திறன்கள்: தேவை அதிகரிப்பு

மின்னிலக்கம், பசுமை, பராமரிப்புத் திறன்கள்: தேவை அதிகரிப்பு

3 mins read

மின்­னி­லக்­கம், பசு­மைத் திட்­டம், பரா­ம­ரிப்பு ஆகிய திற்­ன­க­ளைக் கொண்ட ஊழி­யர்­க­ளுக்­கான தேவை கடந்த நான்கு ஆண்­டு

­க­ளாக அதி­க­ரித்­துள்­ள­தாக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பசு­மைத் திட்ட நிர்­வா­கத் திறன்­க­ளுக்­கான தேவை 23 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. நீடித்த நிலைத்­தன்மை முத­லீட்டு

நிர்­வா­கத் திற­னுக்­கான தேவை 15.5 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

மென்­பொ­ருள் பரி­சோ­தனை, பய­னீட்­டா­ளர் அனு­பவ வடி­வ­மைப்பு போன்ற திறன்­க­ளுக்­கான தேவை­யும் அதே கால­கட்­டத்­தில் ஏறத்­தாழ இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

நிபு­ணத்­துவ ஆலோ­சனை போன்ற பரா­ம­ரிப்­புத் திறன்­க­ளுக்­கான தேவை­யும் ஏற்­றம் கண்­டுள்­ளது. ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் இடம்­பெற்­றன. இந்த அறிக்­கையைக் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்­தில் நடை­பெற்ற ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் கல்­வி­மான்­கள், முத­லா­ளி­கள் விரு­த­ளிப்பு விழா­வில் வெளி­யிட்­டார்.

வளர்ச்­சி வாய்ப்­பு­கள் இருப்­பதை அறிக்கை காட்­டு­வ­தாக திரு சான் தெரி­வித்­தார். இது­போன்ற அறிக்­கையை ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் வெளி­யி­டு­வது இது இரண்­டா­வது முறை. நாட்­டின் பொரு­ளி­யலை மேம்­ப­டுத்த தேவை­யான திறன்களை அந்த அறிக்கை பட்­டி­ய­லி­டு­கிறது.

இந்­தத் திறன்­களை அறிக்கை மின்­னி­லக்­கம், பசு­மைத் திட்­டம், பரா­ம­ரிப்­புத் திறன் என மூன்று பிர­தான பிரி­வு­க­ளா­கப் பிரித்­துள்­ளது.

2018ஆம் ஆண்­டுக்­கும் இவ்­வாண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் காலி­யான வேலை­கள் குறித்து சிங்­கப்­பூ­ரில் உள்ள முத­லா­ளி­கள் விளம்­ப­ரம் செய்­தி­ருந்­ததை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு தேவை அதி­கம் உள்ள திறன்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு வகை திற­னுக்­கும் தேவை எந்த அள­வுக்கு வேக­மாக அதி­க­ரித்­துள்­ளது என்­பது குறித்­தும் அறிக்கை விவ­ரித்­துள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, இத்­திறன்

­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வேலை­கள் பற்­றி­யும் இத்­தி­றன்­களை எங்கு கற்­றுக்­கொள்­ள­லாம் என்­பது குறித்­தும் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பணி­யிடை மாற்ற ஊழி­யர்­க­ளுக்­கென அறிக்­கை­யில் தனி­யி­டம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. பொரு­ளி­யல் வளர்ந்து வ­ரும் நிலை­யில் இத்­த­கைய ஊழி­யர்­கள் தங்­கள் திறன்­களை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம் என்­பது குறித்­தும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உல­க­ளா­விய அவ­ச­ர­நி­லை­

யா­கப் பரு­வ­நிலை மாற்­றம் அடை­யா­ளம் காணப்­ப­டு­வ­தால் பசு­மைப் பொரு­ளி­யல் திறன்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர் திரு­வாட்டி மெலிசா லோ கூறி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் உள்ள பல துறை­களில் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் விரை­வு­ப­டுத்­தப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தொடர்பு, தொழில்­நுட்பப் பேரா­சி­ரி­யர் லிம் சன் சன் தெரி­வித்­தார்.கட்­டு­மா­னத்­துறை, விவ­சா­யத்­துறை, வாழ்­வி­யல்­துறை ஆகி­யவை இதில் அடங்­கும். இதன் விளை­வாக பெரும்­பா­லான அல்­லது அனைத்­துத் துறை­க­ளி­லும் மின்­னி­லக்­கத் திறன்­கள் அவ­சி­ய­மா­கி­வி­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மின்­னி­லக்­கம், பசு­மைத் திட்­டம், பரா­ம­ரிப்­புத் திட்­டம் ஆகி­ய­வற்­றைப் பெற அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் தேதி முதல் புதுப்­பிக்­கப்­பட்ட ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிறப்­புப் பயிற்­சி­க­ளில் சிங்­கப்­பூ­ரர்­கள் ஈடு­ப­ட­லாம்.

"இந்­தத் திறன்­க­ளுக்­கான தேவை தற்­போது அதி­க­மாக அதி­

க­ரித்து வரு­கிறது. ஆனால் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிறகு இத்­தி­றன்­க­ளுக்­கான தேவை இவ்­வ­ளவு வேக­மாக அதி­க­ரிக்­காது. எனினும், இத்­தே­வை­கள் பல ஆண்­டு­க­ளாக இருந்து வரும்

சந்­தைப்­ப­டுத்­து­தல் போன்ற |பணி­

க­ளி­ல் நிலைத்­தி­ருக்­கும். இதற்கு மக்­களும் தொழில்­து­றை­களும் தயா­ராக இருக்க வேண்­டும்," என்­றார் பேரா­சி­ரி­யர் லிம்.