தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் மரணம்

தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் மரணம்

1 mins read

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் நேற்று நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஒருவர் மாண்டார், கிட்டத்தட்ட 30 பேர் காயம் அடைந்தனர். மாண்­ட­வர் காவல்­துறை அதி­காரி என்று தெரி­விக்­கப்படுகிறது.

காவல்­துறை அதி­கா­ரி­யாக ஒரு­வர் வேட­மிட்டு கார் ஒன்றை வளா­கத்­திற்­குள் ஓட்­டிச் சென்று அதை அங்கு நிறுத்தி வைத்­தார்.

அந்­தக் காரில் வெடி­குண்­டு­கள் நிரப்­பப்பட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சிறிது நேரம் கழித்து கார் வெடித்­துச் சித­றி­யது.

காவல்­து­றை­யி­ன­ருக்கு எதி­ராக வெடி­குண்டு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளதாகவும் இடி­பா­டு­கள் அகற்றப்பட்டு வருவதாகவும் காய­

ம­டைந்­தோர் எண்­ணிக்கை உய­ரக்­கூ­டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.