அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; பத்து பேர் வரை மாண்டிருக்கலாம்

அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; பத்து பேர் வரை மாண்டிருக்கலாம்

1 mins read
26b284b6-7b02-4151-8ce4-4357c4da64a5
கோப்புப் படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சம்பவத்தில் பத்து பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம்.

கடந்த மூன்று நாள்களில் அமெரிக்காவில் கவனத்தை ஈர்த்திருக்கும் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சம்பவம் இது.

செஸபீக் எனும் இடத்தில் உள்ள வால்மார்ட் பேரங்காடிக் கிளையில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

துப்பாக்கிக்காரன் கடைக்குள் மாண்டு கிடந்தான் என்று காவல்துறையினர் கூறினர். அவன் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஆனால் கிளை நிர்வாகிதான் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்று பிபிசி இணையத்தளம் குறிப்பிட்டது.

வர்ஜினியா நேரப்படி இரவு 10.12 மணிக்கு, கடை மூடுவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்னர், சம்பவம் நடந்தது.

கடந்த சனிக்கிழமை, கொலராடோ ஸ்பிரிங்கிசில் பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினர் ஒன்றுகூடும் இரவுநேரக் கேளிக்கை விடுதியில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் ஐவர் கொல்லப்பட்டனர்.