மலேசிய அரசியல் இழுபறி; தேசிய முன்னணியைச் சந்தித்த மலேசிய மாமன்னர்

1 mins read
56d87d25-b9f3-491d-a636-9816d58880b1
அரச மாளிகையில் மலேசிய மாமன்னரை புதன்கிழமை காலையில் சந்தித்துவிட்டுச் சென்ற தேசிய முன்னணிக் கூட்டணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி. -

மலேசியாவில் அனைவரின் கவனமும் தற்போது பாரிசான் நே‌ஷனல் கூட்டணி மீதுள்ளது.

புதன்கிழமை (நவ. 23) காலையில் மலேசிய மாமன்னர் பாரிசான் நே‌ஷனல் எனப்படும் தேசிய முன்னணியின் தலைவர்களை சந்தித்தார்.

ஐக்கிய அரசாங்கத்தில் பங்கெடுக்கும்படி மாமன்னர் தேசிய முன்னணியைக் கேட்டுக் கொண்டதாக அதன் தலைவர் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

மாமன்னரின் அந்த யோசனையை தாம் ஏற்பதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

ஆனால் புதன்கிழமை மாலையில் தேசிய முன்னணியின் தலைவர்கள், பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணியின் தலைவர்களுடன் கோலாலம்பூரில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டலில் சந்திப்பு நடத்தினர்.

இதற்கிடையே மலேசிய மாமன்னர் நாளை வியாழக்கிழமை மாநில மன்னர்களைச் சந்திக்கவுள்ளார்.

மத்திய அரசாங்கத்தை அமைப்பது பற்றிய மாநில மன்னர்களின் கருத்தை அறிந்துகொள்ள அந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

மலேசியப் பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியும் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணியும் கணிசமான இடங்களைப் பெற்றன.

ஆனால் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

மூன்றாவது பெரிய கூட்டணியான தேசிய முன்னணி ஆதரவு தெரிக்கும் தரப்புதான் அடுத்த ஆட்சியை அமைக்கும் என்று கருதப்படுகிறது.