மிக அதிக அளவில் 9,655 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு; விண்ணப்பிக்க 9 நாள்கள்

மிக அதிக அளவில் 9,655 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு; விண்ணப்பிக்க 9 நாள்கள்

3 mins read
198a628f-0a1d-4a14-85b7-0aec685c7b56
குயீன்ஸ்­ட­வுனில் உலு பாண்­டான் பேங்க்­சில் டோவர் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் கட்டப்படும் வீடுகளின் வரைப்பட தோற்றம். படம்: வீவக -

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் இது­வரை இல்லா அள­விற்கு 9,655 பிடிஓ வீடு­களை நேற்று விற்பனைக்குக் கொடுத்­தது.

பிடிஓ முறை 2002ல் நடப்­புக்கு வந்­தது. அது முதல் இந்த அள­வுக்கு ஆக அதிக எண்­ணிக்­கை­யில் வீடு­கள் ஒரே தவ­ணை­யில் விற்­ப­னைக்குக் கொடுக்­கப்­ப­டு­வது இதுவே முதல்­முறை.

அந்த வீடு­கள் ஐந்து பேட்­டை­களில் இடம்­பெ­றும் 10 வீட­மைப்­புத் திட்­டங்­களில் அமைந்து இருக்கும்.

அவற்­றில் குவீன்ஸ்­ட­வு­னில் இடம்­பெ­றும் இரண்டு திட்ட வீடு­களும் காலாங்/வாம்­போ­வில் கட்டப்­படும் ஒரு திட்ட வீடு­களும் பிர­தான இட வீடு­க­ளாக (பிஎல்ஹெச்) இருக்­கும்.

இந்த வீடு­களை விற்­கும்­போது 6% மானி­யத்தைத் திருப்பிக் கழ­கத்­தி­டம் கொடுத்­து­விட வேண்டி இருக்­கும். இவற்­றோடு, எஞ்­சிய வீடு­கள் விற்­பனைத் திட்­டத்­தின் கீழ் இந்த ஆண்டில் கடை­சி­யாக இரண்­டாவது தட­வை­யாக மேலும் 1,071 வீடு­கள் விற்­ப­னைக்­குக் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

இவற்­றை­யும் சேர்த்து இந்த ஆண்­டில் மேலும் மொத்­தம் 10,726 புதிய வீடு­களை வாங்­கிக்கொள்ளும் வாய்ப்பு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்குக் கிடைத்து இருக்­கிறது.

வீட்டை வாங்­கு­வோ­ருக்கு வீட்டை தேர்வு செய்ய மேலும் கால­அ­வ­கா­சம் கிடைக்­கும் வகை­யில் விண்­ணப்­பக் காலம் ஒன்­பது நாள்­க­ளாக நீட்­டிக்­கப்­பட்டு இருக்­கிறது. பொது­வாக விண்­ணப்பக் கால அளவு ஏழு நாட்­க­ளாக இருக்­கும். வீவக இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தது.

இந்த ஆண்­டில் கழகம் 23,184 பிடிஓ வீடு­களை விற்­ப­னைக்கு கொடுத்­துள்­ளது. இந்த எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் 17,000 வீடு­க­ளாக இருந்­தது.

குவீன்ஸ்­ட­வுன் முதிர்ச்­சி­அடைந்த பேட்­டை­யில் இரண்டு திட்­டங்­களில் கட்­டப்­படும் பிஎல்ஹெச் மாதிரி வீடு­க­ளைப் பொறுத்­த­வரை வாங்க, விற்க கடும் நிபந்­த­னை­கள் இடம்­பெ­றும்.

அந்த இரு திட்­டங்­களில் ஆகப் பெரிய திட்­டம் உலு பாண்­டான் பேங்க்­சில் கட்­டப்­படும். அதன்படி ஏழு புளோக்­கு­களில் 1,330 மூவறை, நாலறை வீடு­கள் அமைந்திருக்­கும்.

அந்த வீடு­கள் டோவர் எம்­ஆர்டி நிலை­யத்­தில் இருந்து நடந்து செல்லும் தொலை­வில் இருக்­கும்.

மூவறை வீட்­டின் விலை மானி­ய­மின்றி $362,000லிருந்து $504,000 இருக்­கும். நாலறை வீட்­டின் விலை $546,000லிருந்து $725,000 வரைப் பட்டு இருக்­கும்.

அந்த வீடு­களை வாங்­கு­வோர் ஏறக்­கு­றைய 71 மாதம் காத்­தி­ருக்க வேண்­டும். அந்­தத் திட்ட வீடு­கள் 2029 மூன்­றா­வது காலாண்­டில் கட்டி முடிக்­கப்­படும் என்று மதிப்­பி­டப்­பட்டு இருக்­கிறது.

குவீன்ஸ்­ட­வு­னில் இடம்­பெ­றும் பிஎல்­ஹெச் இரண்­டாம் திட்­டம் வீடு­கள் கிம் மோ நட்­டு­ரா­வில் கட்­டப்­ப­டு­கின்­றன. அங்கு நான்கு புளோக்­கு­களில் 991 ஈரறை நீக்குப்­போக்கு வீடு­கள், மூவறை, நாலறை வீடு­கள் கட்­டப்­படும்.

மூவறை வீட்­டின் விலை $364,000லிருந்து $487,000 இருக்­கும். நாலறை வீட்­டின் விலை $516,000லிருந்து $696,000 இருக்­கும். இந்த வீடு­களை வாங்­கு­வோர் 53 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

காலாங்/வாம்­போ­வில் காலாங் ஹாரி­ச­னில் ஆகச் சிறிய பிஎல்ஹெச் திட்ட வீடு­கள் இடம்­பெ­றும். காலாங் எம்­ஆர்டி நிலை­யத்­திற்குப் பக்­கத்­தில் மூன்று புளோக்­கு­களில் 477 மூவறை, நாலறை வீடு­கள் எழும்­பும்.

மூவறை வீட்­டின் விலை $335,000லிருந்து $447,000 இருக்­கும். நாலறை வீட்­டின் விலை $509,000லிருந்து $690,000 இருக்­கும். இந்த வீடு­களை வாங்­கு­வோர் சுமார் 53 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

இப்­போது விற்­ப­னைக்கு விடப்­பட்டு உள்ள வீடு­களில் முதிர்ச்சி­ அடை­யாத மூன்று பேட்­டை­களில் இடம்­பெ­றும் ஆறு பிடிஓ திட்ட வீடு­களும் உள்­ள­டங்­கும்.

கட்­டப்­ப­ட­வி­ருக்­கின்ற நாலறை, அதற்­கும் பெரிய வீடு­களில் குறைந்­த­பட்­சம் 95 விழுக்­காட்டு வீடு­கள் முதல்­முறை வீடு வாங்கும் குடும்­பங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­படும்.

அதே­போல, மூவறை வீடு­களில் 85% அவர்­க­ளுக்­காக ஒதுக்­கப்படும்.

இப்­போது விற்­ப­னைக்கு வந்­தி­ருக்­கின்ற முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­களில் கட்­டப்­படும் நாலறை வீடு­கள் அனைத்­துமே $400,000க்கும் குறை­வான விலை உள்­ளவை என்­பதை கழ­கம் சுட்டியது.

வீடு­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் வீவக வீட்டு இணைய நுழை­வா­யி­லில் டிசம்­பர் 1ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடி­வ­டைந்து­வி­டும். குலுக்­கல் முறைப்­படி வீடு­கள் ஒதுக்­கப்­படும்.

வீடு­க­ளுக்­கான தேவையைத் தொடர்ந்து தான் அணுக்­க­மாகக் கண்­கா­ணித்து வரு­வ­தாக குறிப்­பிட்ட கழ­கம், 2021 முதல் 2025வரை தேவை­யெ­னில் மொத்­தம் 100,000 வீடு­கள் வரை விற்­பனைக்குக் கொடுப்பதற்குத் தான் ஆயத்­த­மாக இருப்­ப­தா­க­வும் தெரிவித்து உள்ளது.