இந்தியாவின் ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் சிப்பந்திகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமயம் தொடர்பான கயிறுகளை மணிக்கட்டு, கணுக்காலில் அணியக் கூடாது. தலைக்குச் சாயம் பூசலாம், ஆனால் இயல்பான நிறத்தில் இருக்க வேண்டும். முத்து காதணிகளை அணியக் கூடாது. ஆனால் தங்கம் அல்லது வைரக் காதணிகளை அணியலாம். ஒற்றை வளையல் அணியலாம். உதட்டுச்சாயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். புடவை, மேற்கத்திய உடை அணியலாம். பிளாஸ்டிக் பை களை எடுத்துச் செல்லக்கூடாது, வழுக்கைத் தலையில் ஆங்காங்கே முடி இருந்தால் முற்றிலும் அகற்ற வேண்டும் என்பன புதிய கட்டுப் பாடுகளாகும். ஏர்இந்தியா நிறு வனத்தை டாட்டா நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது.
ஏர் இந்தியா சிப்பந்திகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
1 mins read

