மோடி: உலகமே இந்தியாவை இன்று உற்று நோக்குகிறது

மோடி: உலகமே இந்தியாவை இன்று உற்று நோக்குகிறது

1 mins read

புது­டில்லி: இந்­தியா சுதந்­திர நாடா­கத் தொட­ராது என்­றும் அது சுக்­கு ­நூ­றாக உடைந்­து­வி­டும் என்று பலர் நம்­பிய காலம்­போக, தற்­போது இந்தி­யா­வின் வேக­மான மேம்­பாடு, பொரு­ளி­யல் வளர்ச்சி, உல­க­ள­வில் உயர்ந்­து­வ­ரும் அதன் மதிப்பு ஆகி­ய­வற்றை உல­கமே உற்று நோக்­கி­யுள்­ள­தாக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி கூறி­யுள்­ளார்.

இந்­திய உச்­ச­ நீ­தி­மன்ற வளா­கத்­தில் நடந்த அர­சி­யல் சாசன நாள் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் நேற்று உரை­யாற்­றிய திரு மோடி, நாடு அதன் வேறு­பா­டு­க­ளை­யும் பன்­மு­கத்­தன்­மை­யை­யும் பாது­காக்­கும் அதேவேளை­யில் வளர்ச்சி அடைந்து வரு­வ­தா­கச் சொன்­னார்.

மும்­பை­யில் பயங்­க­ரவா­தத் தாக்­கு­தல் நடந்து 14 ஆண்­டு­கள் நேற்று நிறை­வ­டைந்­ததை ஒட்டி, அத்­தாக்கு தல்­களில் உயிர்­விட்ட பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு அவர் புக­ழஞ்சலி செலுத்தினார்.

இந்­தி­யச் சட்­டங்­கள் எளி­மை­யாக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் மக்­க­ளுக்கு நீதிச் சேவை­கள் எளி­தா­க­வும் தங்­கள் தாய்­மொ­ழி­யி­லும் கிடைப்­ப­தற்கு நீதித்­துறை ஆவன செய்­து­வ­ரு­வ­தா­க­வும் திரு மோடி கூறி­னார்.

இந்­திய நீதி­மன்­றச் சேவை­ களைப் பெறு­வதற்­கான பல்­வேறு மின்­த­ளங்­களை திரு மோடி நேற்று தொடங்கி வைத்­தார்.