மிதக்கும் மேடைக்கு இறுதி அணிவகுப்புடன் பிரியாவிடை

மிதக்கும் மேடைக்கு இறுதி அணிவகுப்புடன் பிரியாவிடை

1 mins read
64b144a3-f46f-4cc2-a7f8-8d70a2d98b72
மரினா பே மிதக்கும் மேடையில் நேற்று நடைபெற்ற இறுதி அணிவகுப்பில் அடிப்படை ராணுவப் பயிற்சி முடிவுற்றதைக் கொண்டாடும் விதத்தில் தேசிய சேவையாளர்கள் தங்கள் தொப்பிகளை மேலே வீசினர். நீர்முகப்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட தேசிய தின அணிவகுப்புகளை சிங்கப்பூரர்கள் ஒவ்வோர் ஆண்டும் ரசித்து மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய தின அணி­வ­குப்­புக்­குப் பெயர்­போன மரினா பே மிதக்­கும் மேடை புது வடி­வம் பெறுவ­தற்கு முன்­னர், அங்கு இறு­தி­யாக அணி­வ­குப்பு நடை­பெற்­றி­ருக்­கிறது. அடிப்­படை ராணு­வப் பயிற்­சியை முடித்த சுமார் 4,000 தேசிய சேவை­யா­ளர்­கள், 350 தயார்­நிலை போர்க்­கா­லப் படை­வீ­ரர்­கள் ஆகி­யோ­ரின் பயிற்சி முடி­வுற்­ற­தைக் குறிக்க அணி­வ­குப்பு நடந்­தது.

தேசிய சேவை­யின் 55வது ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் வித­மா­க­வும் அது அமைந்­தது.

தேசிய சேவைக் கட­மை­களை அடுத்­தத் தலை­மு­றை­யி­டம் ஒப் படைப்­ப­தைக் குறிக்­கும் வகை­யில் மூன்­றாம் சார்­ஜண்ட் சுஹாய்ரி சம்­சு­தீன், நாட்­டுக்­கொ­டியை தமது முன்­னாள் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் லிம் வீ ஹோங்­கி­டம் ஒப்­ப­டைத்­தார்.

மரினா பே மிதக்­கும் மேடை அடுத்த ஆண்டு தேசிய சேவை சதுக்­க­மாக மாற்­றப்­ப­ட­வுள்­ளது.

தேசிய சேவையை நினை­வில் நிறுத்­தும் நிரந்­தர இட­மாக தேசிய சேவை சதுக்­கம் இருக்­கும் என்று தற்­காப்பு மூத்­தத் துணை அமைச்­சர் ஹெங் சீ ஹாவ் நேற்று அணி­வ­குப்­பின்­போது கூறி­னார்.

நாட்­டின் தேசிய சேவைப் பய­ணத்­தை­யும் சிங்­கப்­பூ­ருக்கு தேசிய சேவை­யா­ளர்­கள் ஆற்­றிய பங்­கை­யும் நினை­வு­கூ­ரும் கண்­காட்சி அங்கு அமைக்­கப்­படும் என்­றும் திரு ஹெங் தெரி­வித்­தார்.

கடந்த 2007ஆம் ஆண்­டி­லி­ருந்து மரினா பே மிதக்­கும் மேடை யில் தேசிய தின அணி­வ­குப்பு 11 முறை நடை­பெற்­றுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் முதல் நாட்­டுத் தலை­வ­ராக திரு யுசோஃப் இஷாக் பத­வி­யேற்­றது போன்ற முக்­கிய வர­லாற்று நிகழ்ச்­சி­களும் அந்த ­வட்­டா­ரத்­தில் நடந்­துள்­ளன.