ஏழைகளுக்கு மட்டுமே உதவித்தொகை: அன்வார்

ஏழைகளுக்கு மட்டுமே உதவித்தொகை: அன்வார்

2 mins read

ஒருசில நாளில் புதிய அமைச்சரவை

விலை­வாசி உயர்­வால் சிர­மப்­படும் குறைந்த வரு­மா­னப் பிரி­வி­ன­ருக்கு நேர­டி­யாக ரொக்க உதவி அளிக்­கும் வகை­யில் அர­சாங்க உத­வித் திட்­டங்­களை தமது அர­சாங்­கம் மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்து உள்­ளார்.

தேவைப்­ப­டு­வோ­ருக்கு மட்­டுமே உதவி போய்ச்­சே­ரும் வகை­யில் திட்­டத்­தை மாற்றுவதால் ஏற்­படும் விளை­வு­கள் குறித்து ஆராய அர­சாங்க அமைப்­பு­க­ளுக்கு இரு­வார அவ­கா­சம் அளிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார். அத்­து­டன் தனி­யார் துறைக்­கான உத­வித்­தொ­கை­களை அதி­க­ரிப்­பது குறித்து, குறிப்­பாக இது­வரை உதவி பெறாத தொழில்­து­றை­கள் பற்றி கருத்­துத் தெரி­விக்­கு­மா­றும் அமைப்பு­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ள­தாக அவர் சொன்­னார்.

புத்­ரா­ஜெ­யா­வில் நேற்­றுக் காலை நடை­பெற்ற வாழ்க்­கைச் செல­வின சிறப்­புக்­கூட்­டம் மீதான தேசிய செயல் மன்­றத்­திற்­குத் தலைமை தாங்­கிய அவர், கூட்ட முடி­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"இதற்கு முன்­னர் அளிக்­கப்­பட்ட மின்­சா­ரக் கட்­ட­ணச் சலு­கை­கள் ஏழை­களும் வச­தி­யா­ன­வர்­களும் அனு­ப­விக்­கும் வகை­யில் அமைந்து உள்­ளன. அதில் அர்த்­த­மில்லை என்று நினைக்­கி­றேன்.

"இது­போன்ற சலு­கை­கள் தொட­ரும், அதே­நே­ரம் அதி­கம் சம்­பாதிப்­ போ­ருக்கு அது கிடைக்­காது. ஏழை மக்­க­ளுக்­கான உதவி என்று அறி­வித்­து­விட்டு யாரோ ஒரு­வர் அதனை அனு­ப­விப்­பது சரி­யல்ல," என்று திரு அன்­வார் விளக்­கி­னார்.

மேலும் அவர் கூறு­கை­யில், "உயர்ந்து வரும் வாழ்க்­கைச் செல­வி­னம் குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோ­ரில் பெரும்­பா­லானோ­ரைச் சிர­மப்­ப­டுத்­து­கிறது. இரு வாரத்­திற்­குப் பிறகு அர­சாங்க அமைப்­பு­கள் அளிக்­கும் யோச­னை­களை அமைச்­ச­ரவை ஏற்­றுக்­கொள்­ளும் பட்­சத்­தில் அத­னைத் தொடர்ந்து சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளு­டன் கலந்து பேசு­வோம்," என்­றார்.

முந்­திய அர­சாங்­கம் கடந்த மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்த சிறிய அள­வி­லான வர­வு­செ­ல­வுத் திட்ட அம்­சங்­களை அன்­வார் அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கத் தொடங்கி உள்­ளது. அர­சாங்­கம் மீதான சுமை­யைக் குறைக்­கும் நோக்­கில் சில உத­வித் திட்­டங்­கள் அந்த வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யில் இடம்­பெ­ற­வில்லை.

உத­வித் திட்­டங்­க­ளுக்காக இந்த ஆண்­டில் மட்­டும் 77.7 பில்­லி­யன் ரிங்­கிட் (S$24 பில்­லி­யன்) செல­விட மதிப்­பி­டப்­பட்­டது.

புதிய அமைச்­ச­ரவை பற்றி செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது, மூன்று வெவ்­வேறு கூட்­ட­ணி­களில் உள்ள கட்­சி­க­ளு­டன் பல்­வேறு ஆலோ­ச­னை­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அடுத்த ஒரு­சில நாள்­களில் அமைச்­ச­ரவை குறித்து அறி­விக்­கப்­படும் என்­றும் திரு அன்­வார் தெரி­வித்­தார். இதற்கு முன்­னர் இருந்­த­தைப்­போல் அல்­லா­மல், சிறிய அமைச்­ச­ர­வை­யையே அமைக்க இருப்­ப­தாக கடந்த வெள்­ளிக்

­கி­ழமை அவர் கூறி­யி­ருந்­தார்.

மலே­சி­யா­வில் 2018க்குப் பிறகு மூன்று பிர­த­மர்­கள் மாறி மாறி ஆட்சி செய்­த­தன் விளை­வாக அங்கு நிச்­ச­ய­மற்ற அர­சி­யல் நில­

வ­ரம் நீடித்­தது. அதனால், புதிய அர­சாங்­கத்­தின் மீது முத­லீட்­டா­ளர்­கள் நம்­பிக்கை வைத்­துள்­ள­னர். அர­சி­யல் குழப்­பத்­திற்கு முடிவு கட்­டப்­படும் என்­றும் நாட்­டின் நிலைத்­தன்மை திரும்­பும் என்­றும் அவர்­கள் நம்­பு­கின்­ற­னர்.