இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தீக்குளித்து மரணம்

இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தீக்குளித்து மரணம்

2 mins read

இந்தி மொழி­யைத் திணிப்­ப­தற்கு எதிர்ப்­புத் தெரி­விப்­ப­தா­கக் கூறி தமிழ்­நாட்­டில் 85 வயது முதி­ய­வர் ஒரு­வர் தமக்­குத் தாமே தீயிட்­டுக்­கொண்டு உயிரை மாய்த்­துக்­கொண்­டார். இந்­தச் சம்­ப­வம் மிகுந்த பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

சேலம் மாவட்டம் மேட்­டூரை அடுத்த பி.என். பட்டி பேரூ­ராட்­சிக்கு உட்­பட்ட தாழை­யூர் என்­னும் பகு­தி­யைச் சேர்ந்த விவ­சா­யி­யான தங்­க­வேல் (படம்), திமு­க­வின் கட்­சிப் பொறுப்­பு­களில் இருந்­த­வர்.

திமுக முன்­னாள் ஒன்­றிய விவ­சாய அணி அமைப்­பா­ள­ரான அவ­ருக்கு ஜானகி என்ற மனை­வி­யும் மணி, ரத்­ன­வேல் என்ற இரு மகன்­களும் உள்­ள­னர்.

திமுக மீது மிகுந்த பற்று கொண்­ட­வர். அக்­கட்சி நடத்­திய பல்­வேறு போராட்­டங்­களில் கலந்­து­கொண்டு சிறை சென்­ற­வர்.

இந்­தித் திணிப்­புக்கு எதி­ரா­கப் பேசி வந்த அவர், நேற்று முன்­தி­னம் காலை தாழை­யூர் திமுக அலு­வ­ல­கத்­துக்­குச் சென்­றார். இந்­திக்கு எதி­ராக முழக்­க­மிட்­ட­ப­டியே பெட்­ரோலை தமது உட­லில் ஊற்றி தீவைத்­துக்­கொண்­டார். அரு­கில் இருந்­த­வர்­கள் பத­றி­ய­டித்­துக் கொண்டு ஓடிச் சென்று தங்­க­வே­லைக் காப்­பாற்ற முயன்­ற­னர். ஆனால், உடல் முழு­வ­தும் தீக்­கி­ரை­யா­ன­தில் அந்த இடத்­தி­லேயே அவர் சட­ல­மாக சரிந்­தார்.

தீக்­கு­ளிக்­கும் முன்­னர் ஒரு வெள்­ளைத் தாளில் சில வாச­கங்­களை எழுதி கையில் வைத்­தி­ருந்­தார்.

"மோடி அரசே, மத்­திய அரசே, அவ­ச­ரம் வேண்­டாம். தாய்­மொழி தமிழ் இருக்க இந்தி எதற்கு. இந்தி மாணவ, மாண­வி­ய­ரின் வாழ்க்­கை­யைப் பாதிக்­கும். இந்தி ஒழிக," என்று அந்­தத் தாளில் அவர் எழுதி இருந்­தார்.

இச்சம்பவம் குறித்து காவல்­து­றை­ விசா­ரிக்கிறது.

இந்­தி­யா­வின் வட­மா­நி­லங்­களில் அதி­க­மா­கப் பேசப்­படும் இந்தி மொழி நாட­ள­வில் 44 விழுக்­காட்­டி­னர் பயன்­ப­டுத்­து­

வ­தாக 2011ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட கணக்­கெ­டுப்பு தெரி­விக்­கிறது.

மருத்­து­வம், பொறி­யி­யல் போன்ற படிப்­பு­களை இந்தி மொழி­யில் கற்­க­வும் இந்­தியை அதி­கா­ரத்­துவ தேசிய மொழி­யாக ஆக்­க­வும் உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தலை­மை­யி­லான அலுவல் மொழிக் குழு கடந்த மாதம் அதிபர் திரௌபதி முர்மு விடம் அறிக்கை ஒன்றை சமர்ப் பித்தது. இதற்கு தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.