ஜூலை முதல் நவம்பர் வரை 1,270 தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் ஆட்குறைப்பு

ஜூலை முதல் நவம்பர் வரை 1,270 தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் ஆட்குறைப்பு

1 mins read
5fd2b047-1c48-4558-bef3-27a83f836be6
-
Google News Preferred Icon

இவ்வாண்டு ஜூலை முதல் நவம்பர் வரை 1,270 சிங்கப்பூர்வாசிகள் வேலையிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரியப்படுத்தியுள்ளன என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு முற்பாதியில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 260 சிங்கப்பூர்வாசிகளைவிட இது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும்.

தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது டாக்டர் டான் இந்த விவரங்களைப் பகிர்ந்தார்.

சிங்கப்பூரில் மெட்டா, கோட்டூ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.