ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவு, சட்ட ஒழுங்கிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே அத்தகைய உறவைக் குற்றமாகக் கருதக்கூடாது என்றார் அவர்.
ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவை 377A குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு, குற்றம் எனக் குறிப்பிடுகிறது. இச்சட்டம் நடப்பில் இருந்தால் சிங்கப்பூரில் உள்ள ஒத்தபாலீர்ப்புடைய ஆண்களுக்கு அது தீங்கு இழைப்பதாக இருக்கும் என்று திரு சண்முகம் அக்கறை தெரிவித்தார். இந்தச் சட்டப் பிரிவை நீதிமன்றம் ரத்து செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறு நேர்ந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்
கடமையைத் தவிர்ப்பதற்குச் சமமாகிவிடும் என்றார் அமைச்சர் சண்முகம்.
இத்தகைய சூழல் சிங்கப்பூரில் நிகழக்கூடாது என்றார் அவர். அது நாட்டின் சமூகக் கலாசாரத்தைச் சீர்குலைத்து
விடும் என்று திரு சண்முகம் கூறினார். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
"377A குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவை நீக்குவதற்கான நேரம் கனிந்துவிட்டது. அந்தச் சட்டப்பிரிவு ஒத்தபாலீர்ப்புடைய ஆண்களை அவமானப்படுத்தி அவர்களது மனதைப் புண்படுத்துகிறது. ஒத்தபாலீர்ப்புடைய ஆண்களில் பெரும்பாலானோர் பிறருக்குத் தீங்கு இழைப்பதில்லை. அவர்கள் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றனர். மற்ற சிங்கப்பூரர்களைப் போலவே தாங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்," என்றார் திரு சண்முகம்.
"377A சட்டப்பிரிவு நடை
முறைப்படுத்தப்படாத போதிலும் அது நீக்கப்படாமல் இருக்கும்போது ஒத்த பாலீர்ப்புடைய ஆண்களை அது மனதளவில் பாதிக்கிறது.
"தலைக்கு மேல் கத்தி இருப்பது போன்ற உணர்வு அவர்
களைத் துரத்துகிறது. தமது அந்தரங்க வாழ்வில், மூடப்பட்ட கதவுக்குப் பின்னால் இன்னோர் ஆணுடன் பாலியல் உறவு கொள்ளும்போது குற்றம் புரிகிறோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு அது ஏற்படுத்துகிறது," என்றார் அமைச்சர் சண்முகம்.
இது நியாயமற்றது அமைச்சர் சண்முகம் கூறினார். தனிப்பட்ட முறையில் ஒரே பாலினச் சேர்க்கையைக் கண்டு முகம் சுளிப்
பவராக இருந்தாலும் அத்தகையோருக்கு இத்தகைய நியாயமற்ற சூழல் நிலவுவதை சிங்கப்பூரர்கள் ஒருபோதும் ஏற்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
377A சட்டப்பிரிவை நீக்கக்கூடாது என்று கூறுபவர்களில் பலரும் அந்தச் சட்டம் நடை
முறைப்படுத்தப்படக்கூடாது என விரும்புவதை திரு சண்முகம் சுட்டினார். இந்த விவகாரம் குறித்து நேற்றும் இன்றும் 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கின்றனர்.
377A சட்டப்பிரிவு பிரிட்டிஷ் காலனித்துவ காலகட்டத்தி
லிருந்து இருந்து வருகிறது.
ஒரே பாலினச் சேர்க்கையைப் பற்றி உலகெங்கும் நிலவும் கருத்துகள் குறித்தும் திரு சண்முகம் பேசினார். அது தொடர்பான கருத்துகள் தொடர்ந்து பெருமளவில் பிளவுப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
ஒரே இனத்தவர்களைக் கொண்ட, தீவிர சமயக் கொள்கைகளைக் கொண்ட சமூகங்
களிலும் இந்த நிலை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள சில தேவாலயங்கள் ஒரே பாலினச் சேர்க்கையை ஆதரிப்பதாகவும் சில தேவாலயங்கள் அவற்றை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினர் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்த நாட்டிலும் இதுகுறித்து மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்றார் திரு சண்முகம்.
பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினருக்கு ஃபுளோரிடா, டெக்சஸ் போன்ற குடியரசுக் கட்சியின்கீழ் இருக்கும் அமெரிக்க மாநிலங்களில் தொடர்ந்து வலுவான எதிர்ப்புஉள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரே பாலினச் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்று அங்குள்ள பலர் நம்புகின்றனர். ஆனால் குடியரசு கட்சியினர் சிலர் மாறுபட்ட கருத்துகளைக்
கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
"சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் இந்த விவகாரம் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்துவிட முடியாது. இங்கு பல இன, பல சமய மக்கள் வாழ்கின்றனர். சமுதாயத்தில் பிளவு ஏற்படாமல் இதற்கு ஒரு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் சண்முகம்.

