'பெரும்பாலான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு 5.1%க்கும் அதிகமாக இருக்கும்'

'பெரும்பாலான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு 5.1%க்கும் அதிகமாக இருக்கும்'

2 mins read

பெரும்­பா­லான அரசு ஊழி­யர்­

க­ளின் சம்­பள உயர்வு நாட்­டின் மூல­தார பண­வீக்க விகி­த­மான 5.1 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக இருக்­கும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான சான் சுன் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அண்­மை­யில் அவர்­க­ளது

சம்­ப­ளத்­தில் செய்­யப்­பட்ட மாற்­றங்­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்ட பிறகு, சம்­பள உயர்வு நிர்­ண­யிக்­கப்­படும் என்­றார் அவர்.

தகுதி பெறு­ப­வர்­க­ளின் சம்­பள உயர்வு இவ்­வாண்­டின் பண­வீக்க விகி­தத்­தை­விட அதி­க­மாக இருக்­கும் என்று திரு சான் கூறி­னார்.

இருப்­பி­னும், மிகச் சிறிய அள­வி­லான அரசு ஊழி­யர்­கள் இதற்­குத் தகுதி பெற­மாட்­டார்­கள் என்று அவர் தெரி­வித்­தார். இத்­த­கை­யோ­ரின் சம்­பள உயர்வு 5.1 விழுக்­காட்­டுக்கு அதி­க­மாக இருக்­காது என்று திரு சான் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு மற்ற உத­வித் திட்­டங்­களை அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. உதவி அதி­கம் தேவைப்­

ப­டு­வோ­ருக்கு இவை உத­விக்­க­ரம் நீட்­டும் என்று நம்­பு­கிறோம்," என்று திரு சான் கூறி­னார்.

விலை­வாசி சிறப்­புக் கட்­ட­ணம், கூடு­தல் சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்­டு­கள் ஆகி­ய­வற்றை திரு சான் உதா­ர­ணம் காட்­டி­னார்.

"கடு­மை­யான பண­வீக்­கத்­தால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பைச் சமா­ளிக்க இந்த ஆத­ர­வுத் திட்­டங்­கள் உத­வும். சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு இவை நிவா­ர­ணம் அளிக்கும். குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்குக் கூடு­தல் ஆத­ரவை இவை வழங்­கும்," என்று திரு சான் தெரி­வித்­தார்.

அரசு அதிகாரிகளுக்கு இவ்வாண்டு இறுதியில் 1.1 மாத போனஸ் கிடைக்கும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

குறைந்த சம்பளப் பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு முறை போனஸ் தொகையாக $700 வழங்கப்படும். பொருளியல் நிலையைக் கருத்தில்கொண்டு போனஸ் தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆண்டு நடுப்பகுதியில் வழங்கப்பட்ட தொகையையும் சேர்த்து, இவ்வாண்டில் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 1.45 மாத போனஸ் வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளப் பிரிவு அதிகாரிகளுக்குக் ஒரு முறை போனஸ் தொகையாக கூடுதலாக மொத்தம் $1,100 வரை வழங்கப்படுகிறது.