கட்டுக்கடங்காமல் போன ஆர்ப்பாட்டங்கள்; ஷாங்காயில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

கட்டுக்கடங்காமல் போன ஆர்ப்பாட்டங்கள்; ஷாங்காயில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

2 mins read

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க சீனா நடை­மு­றைப்­ப­டுத்தி உள்ள மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­மல் நாட்­டின் பல பகுதிகளில் அரசாங்­கத்­துக்கு எதி­ரான

பேர­ணி­க­க­ளு­டன் வன்­மு­றை­யும் வெடித்­துள்­ளது. தலை­ந­கர் பெய்­ஜிங்­கி­லும் ஷாங்­கா­யி­லும் ஆர்ப்­பாட்­டங்­கள் நேற்று மோச­ம­டைந்­தன. சாலை­களில் மட்­டு­மின்றி பல்­

க­லைக்­க­ழக வளா­கங்­க­ளி­லும் சீன அர­சாங்­கத்­துக்கு எதி­ரான

அதி­ருப்­திக் குரல்­கள் வலு­வ­டைந்­தன.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ராக மட்­டும் ஆர்ப்­பாட்­டக்­

கா­ரர்­கள் கள­மி­றங்­க­வில்லை, சீன கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் ஆட்சி முடி­வுக்கு வர வேண்­டும் என்றும் அதி­பர் ஸி ஜின்­பிங் பதவி விலக வேண்­டும் என்­றும் அவர்­கள் போர்க் கொடி ஏந்­தி­யுள்­ள­னர். அதி­பர் ஸி ஜின்­பிங் அதி­பர் பதவி ஏற்று பல ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. அவ­ருக்கு எதி­ராக இப்­படி ஓர் ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­வது இதுவே முதல்­முறை.

இந்­நி­லை­யில், ஆர்ப்­பாட்­டக்­

கா­ரர்­க­ளைக் கலைக்­க­வும் அவர்கள் ஒன்­று­கூ­டு­வ­தைத் தடுக்­க­வும் சீன அதி­கா­ரி­கள் தீவிர நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

ஷாங்­கா­யின் மையப் பகு­தியில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கடந்த வார­யி­று­தி­யில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர். அது மீண்­டும் நிக­ழா­தி­ருக்க, அவ்­வி­டத்­தில் சீன அதி­கா­ரி­கள் தடுப்­பு­களை வைத்­துள்­ள­னர். அத்­து­டன் சுற்­றுக்­கா­வல் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, சீன அர­சுக்கு எதி­ரா­கச் சதித்­திட்­டம் தீட்­டும் சில அமைப்­பு­கள், ஸின்­ஜி­யாங்

மாநி­லத்­தின் மேற்­குப் பகு­தி­யில் ஏற்­பட்ட மிக மோச­மான தீச்­சம்­

ப­வத்தை கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களு­டன் தொடர்­பு­ப­டுத்தி புர­ளி­

க­ளைப் பரப்பி இருப்­ப­தாக சீன அர­சாங்­கம் குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

சீனா­வில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நடந்து வரும் மிக அரிய, வெளிப்­ப­டை­யான எதிர்ப்­பைக் காட்­டும் காணொ­ளி­கள் சமூக ஊட­கங்­களில் வலம் வந்­ததை அடுத்து, அவற்றை சீனா முடக்கி வரு­கிறது.

இதற்­கி­டையே, ஆர்ப்­பாட்­டக்

­கா­ரர்­க­ளைக் கலைத்­த­போது சீன அதி­கா­ரி­கள் மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­தாக குறை­கூ­றப்

­ப­டு­கிறது. பிபிசி செய்தி நிறு­

வ­னத்­தைச் சேர்ந்த செய்­தி­யா­ளர் ஒரு­வரை சீன காவல்­து­றை­யி­னர் தாக்கி, தடுத்து வைத்­தி­ருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் குற்­றம்­சாட்­டி­யது.

இதற்­குப் பதி­ல­ளித்த சீன வெளி­யு­றவு அமைச்சு, சம்­பந்­தப்­பட்­ட­வர் தம்மை ஒரு செய்­தி­யா­ள­ராக அடை­யா­ளம் காட்­டிக்­கொள்­ள­வில்லை என்று கூறி­யது. சீனா­வில் இருக்­கும்­போது சீன சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்­ளும்­படி அது அனைத்­து­லக ஊட­கங்­

க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

இது ஒரு­பு­றம் இருக்க, கடந்த வார­யி­று­தி­யில் சீன அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­களை அடுத்து, சீனா­வில் கொவிட்-19 கிருமி பாதிப்பு புதிய உச்சத்தை எட்­டி­யுள்­ளது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி பெய்­ஜிங்­கில் மேலும் 3,860 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.