தெமாசெக் முதலீடு குறித்து சுயேச்சைக் குழு மறுஆய்வு

தெமாசெக் முதலீடு குறித்து சுயேச்சைக் குழு மறுஆய்வு

2 mins read
f5bda6aa-b0c9-42fd-aeac-0c2e6489b212
-

நொடித்­துப்­போன மின்­னி­லக்க நாண­யப் பரி­மாற்ற நிலை­ய­மான எஃப்டி­எக்­ஸில் தெமா­செக் செய்­தி­ருந்த US$275 மில்­லி­யன் (S$377 மில்­லி­யன்) முத­லீட்டு இழப்பு, அர­சா­ங்கத்­தின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­திற்­கான நிதிக் கையி­ருப்­பின் வரு­வா­யையோ நிகர முத­லீட்டு வரு­வாய் பங்­க­ளிப்­பையோ (என்­ஐ­ஆர்சி) பாதிக்­காது.

கார­ணம், என்­ஐ­ஆர்சி என்­பது சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்­த­ முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளின் நீண்­ட­கால வருவாயுடன் தொடர்­பு­டை­யது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அதே­நே­ரம், எஃப்டி­எக்ஸ் சரிந்­த­தன் தாக்­கம் சிங்­கப்­பூ­ரின் விரி­வான நிதிக் கட்­ட­மைப்­பி­லும் பொரு­ளி­ய­லி­லும் சொற்ப அள­வி­லேயே பிர­தி­ப­லித்­தா­க­வும் கேள்வி ­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் அவர் கூறி­னார்.

"எஃப்டி­எக்­ஸில் தெமா­செக் செய்­தி­ருந்த முத­லீட்­டுக்கு ஏற்­பட்ட இழப்பு ஏமாற்­றத்­தைத் தரு­கிறது. வாடிக்­கை­யா­ளர் நிதி­யைத் தவ­றா­கக் கையாண்­ட­தன் மூலம் மோச­டிக்கு வழி­வ­குக்­கக்­கூ­டிய வகை­யில் அந்த மின்­னி­லக்க நாண­யப் பரிமாற்ற நிலை­யத்தை நிர்­வா­கம் செய்­த­தன் மூலம் இழப்பு ஏற்­பட்­டது," என்­றார் நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங்.

"நம்­மைப்­போ­லவே உல­க­ள­வி­லான முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளான பிளாக்­ராக், செக்­கோயா கேப்­பிட்­டல் போன்­ற­வை­யும் அதில் முத­லீடு செய்­தி­ருந்­தன. இழப்­பில் அவை­யும் தப்­ப­வில்லை.

"எஃப்டி­எக்ஸ் சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­ட­வில்லை என்­ப­தால் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த எத்­தனை பேரில் அதில் முத­லீடு செய்­தி­ருந்­த­னர் என்ற விவ­ரம் கிடைக்­க­வில்லை.

"முத­லீடு என்­பதில் அபாயம் இருப்பது இயல்பு. முறை­யான கண்­கா­ணிப்பை மேற்­கொண்­டா­லும் அபா­யத்­தி­லி­ருந்து தப்­பி­விட முடி­யாது. இருப்­பி­னும் நமது முத­லீட்டு நிறு­வ­னங்­கள் ஒவ்­வொரு தோல்­வி­யி­லும் வெற்­றி­யி­லும் பாடம் கற்­றுக்­கொள்­கின்­றன என்­பதே இதில் முக்­கி­ய­மான அம்­சம்.

"அதன்­மூ­லம் நீண்ட காலத்­தில் நல்ல லாபத்­தைத் தரக்­கூ­டிய முத­லீ­டு­களை மேற்­கொள்­ள­வும் அத்­த­கைய முத­லீ­டு­களில் உள்ள அபா­யங்­க­ளைச் சரி­வர கணிக்­க­வும் முடி­கிறது," என்று திரு வோங் விளக்­கி­னார்.

"இப்­ப­டிச் செய்­வ­தன் மூலம் நமது தேசிய சேமிப்­பில் தொடர்ந்து நிதி­யைச் சேர்க்க முடி­யும். அத்­து­டன் வருங்­கால அர­சாங்­கத் திட்­டங்­க­ளுக்­கான நிதிக்கு நிலை­யான வரு­வா­யைப் பெற்­றுத் தர­மு­டி­யும். எஃப்டி­எக்ஸ் முத­லீட்­டைக் கழித்­து­விட்­டுக் கணக்­கிட்­டால், இவ்­வாண்டு மார்ச் மாத நில­

வ­ரப்­படி, தெமா­செக்­கின் உள் வரு­வாய் விகி­தம் கடந்த பத்­தாண்­டு­க­ளைக் காட்­டி­லும் அதி­க­மாக இருக்­கும். நிதித்­துறையின் சரா­சரி வரு­வா­யைக் காட்­டி­லும் சிறப்­பா­னது அது. எஃப்டி­எக்­ஸுக்கு ஏற்­பட்ட நிலைமை சிங்­கப்­பூ­ரின் முத­லீட்டு நிறு­வ­னத்­திற்கு நிதி இழப்பை மட்­டு­மல்ல அதன் நற்­பெ­ய­ரி­லும் இழப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதில் முதலீடு செய்தது பற்றிய உள் மறு­ஆய்வை சுயேச்­சைக் குழு ஒன்­றின் மூலம் தெமா­செக் தொடங்கி உள்­ளது. முத­லீட்­டுக்­கும் அந்­தக் குழு­வுக்­கும் தொடர்­பில்லை. மறு­ஆய்­வின் முடி­வு­களை தெமா­செக் சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் தெரி விக்கும்," என்­றார் திரு வோங்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கிற்­குப் பதி­ல­ளித்த அவர், "தெமா­செக்­கிற்­குள் மேற்­கொள்­ளப்­படும் மறு­ஆய்வு என்­பது வழக்­க­ மான நடை­முறைதான். தெமா­செக்­கின் செயல்­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வ­தோடு வருங்­கா­ல முதலீட்டுக்கான பாடங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள இந்த மறு­ஆய்வு உத­வும்," என்­றார்.

'எஃப்டிஎக்ஸ்' சரிவின் தாக்கம் பற்றி துணைப் பிரதமர் வோங் விளக்கம்