பூன் லேயில் நடைபெற்ற திருமண விருந்தில் கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக நேற்று இரு ஆடவர்
களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
முஹம்மது சஜித் சலீம், 21, என்பவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தலைமறைவுக் கும்பலில் இடம்பெற்ற குற்றத்தையும் வேண்டுமென்றே ஆயுதத்தால் கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்தையும் இவர் நவம்பர் 2ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
இவரது கூட்டாளியான 20 வயது ஆடவருக்கு மூன்றாண்டு, மூன்று மாத சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. மேலும், இவருக்கு $1,800 அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் ஓராண்டு காலத்திற்கு எந்தவொரு வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்ற தடையும் இவருக்கு விதிக்கப்பட்டது.
பயங்கரமான ஆயுதம் மூலம் வேண்டுமென்றே கடுமையான காயம் ஏற்படுத்தியது, சட்டவிரோதக் கும்பலில் சேர்ந்து குற்றம் இழைத்தது போன்றவற்றை இவர் ஒப்புக்கொண்டார்.
தலைமறைவுக் கும்பலில் சேர்ந்து 2016ஆம் ஆண்டு குற்றத்தில் ஈடுபட்டபோது இவரின் வயது 14 என்
பதால் இவரைப் பற்றிய விவரங்கள் குழந்தை, இளையோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
18 வயதாவதற்கு முன்னர் குற்றத்தில் ஈடுபடுவோரின் விவரங் களை பகிரங்கப்படுத்த இச்சட்டம் தடுக்கிறது. இந்த இளையர் சார்பில் வடி பி.வி.எஸ்.எஸ், சஜித் சார்பில் என்.திவானன் ஆகியோர் வாதா டினர்.
குற்றமிழைத்த இருவரும் இளையோர் என்பதால் சமூக சீர்திருத்தப் பயிற்சியைத் தண்டனையாக விதிக்குமாறு முன்னதாக இந்த இரு வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால், குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டது முதல்முறை அல்ல என்பதால் சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். அரவிந்தி ரன் கேட்டுக்கொண்டார்.
கலவரத்தில் ஈடுபடுதல் உட்பட பல்வேறு குற்றங்களில் சஜித் ஈடுபட்டவர் என்றும் இதற்கு முன்னர் அவர் கண்காணிப்பு ஆணையின்கீழ் வைக்கப்பட்டு இருந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தமது வாதத்தில் குறிப்பிட்டார்.
அதேபோல இளையவரும் கலவரம், கலாட்டா போன்ற குற்றங்களில் ஈடுபட்டதோடு சீர்திருத்தப் பயிற்சி மையத்தில் அவர் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இருந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு முற்பகுதியில் திருமண விருந்து ஒன்றில் பிரவீன் ராஜ் சந்திரன், 23, சரண்குமார் சுப்பிரமணியம், 22 ஆகிய இரு இளையரை இவ்விருவரும் கத்தியால் வெட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

