பாதுகாப்பான மின் வாகனக் கட்டமைப்பை உறுதிசெய்ய புதிய சட்டம் நிறைவேறியது

பாதுகாப்பான மின் வாகனக் கட்டமைப்பை உறுதிசெய்ய புதிய சட்டம் நிறைவேறியது

2 mins read

மின் வாக­னங்­க­ளுக்­கான பதிவு அதி­க­ரித்து வரும் நிலை­யில் அது­தொ­டர்­பான சட்­டம் ஒன்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இவ்­வாண்டு மேற்­கொள்­ளப்­பட்ட புதிய இல­கு­ரக வாக­னப் பதி­வு­களில் 10 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டவை மின் வாக­னங்­கள்.

2020ஆம் ஆண்டு இந்த விகி­தம் 0.3 விழுக்­கா­டாக இருந்­தது. பதி­வா­கும் மின் வாக­னங்­களில் பாதி கொண்­டோ­மி­னி­யக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளின் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் உரி­யவை என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

மின்­வா­கன மின்­னூட்ட மசோ­தா­வைத் தாக்­கல் செய்து அவர் பேசி­னார்.

2050ஆம் ஆண்டு வாக்­கில் கரி­மம் இல்­லாத நாடாக சிங்­கப்­பூரை மாற்­ற நிலப் போக்­கு­வ­ரத்­துத் துறை முக்­கி­ய பங்கு வகிக்­கிறது என்­றார் அவர். இங்கு வெளி­யேற்­றப்­படும் கரிம அள­வில் 15 விழுக்காடு நிலப் போக்­கு­

வ­ரத்­துத் துறை சம்பந்தப்பட்டது என்­றும் திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

புதிய சட்­டம் மூன்று நோக்­கங்­க­ளைக் கொண்டு இருக்­கும்.

மின்­வா­க­னங்­க­ளுக்­கான மின்­னூட்­டத்தை பாது­காப்­புக்­கு­ரிய வகை­யில் ஒழுங்­கு­ப­டுத்­து­வது, மின்­ வா­கன மின்­னூட்­டக் கட்­ட­மைப்பு மற்­றும் அதன் சேவை­க­ளின் நம்­ப­கத்­தன்­மையை உறு­தி­செய்­வது, சிங்­கப்­பூரின் மின்­வா­கன மின்­னூட்­டக் கட்­ட­மைப்பை எளி­தில் பெற ஊக்­கு­விப்­பது ஆகி­யன அந்த மூன்று நோக்­கங்­கள்.

போது­மான அளவு மின்­னூட்ட முகப்­பு­கள் இருப்­பதை உறுதி செய்­யும் அதி­கா­ரத்தை புதிய சட்­டம் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தி­டம் வழங்­கும். அதன்­படி, இங்­குள்ள எல்லா மின்­னூட்ட முகப்­பு­ களும் ஆணை­யத்­தில் பதிவு செய்­ய­ வேண்­டும். பாது­காப்­புத் தரத்தை உறுதி செய்ய இந்­தப் பதிவு அவ­சி­யம். மின்­னூட்ட விநி­யோ­கம், விளம்­ப­ரம், நிறு­வு­தல், பதிவு செய்­தல், நிர்­வ­கித்­தல், மின்­னூட்­டக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­தல் போன்­றவை பாது­காப்பு அம்­சங்­க­ளுள் அடங்­கும் என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

மின்­னூட்ட சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் அதற்­கு­ரிய உரி­மம் பெற சட்­டம் வலி­யு­றுத்­து­கிறது. எல்­லாக் கட்­ட­டங்­களும் குறைந்­த­பட்ச மின்­னூட்ட முகப்­பு­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும். கொண்­டோ­மி­னி­யக் கட்­ட­டங்­களில் மின்­னூட்ட வச­தியை நிறுவ அங்கு வசிப்­போ­ரில் பாதிப்­பே­ரின் அனு­மதி தேவை. பாது­காப்­புக் கருதி சில விதி­மு­றை­கள் அமல்­ப­டுத்­தப்­படும். உதா­ர­ணத்­திற்கு, அகற்­றப்­

ப­டக்­கூ­டிய மின்­னேற்­றி­க­ளுக்கு மின்­னூட்­டு­தலை குடி­யி­ருப்­பு­களில் மேற்­கொள்­ளக்­கூ­டாது. தீப்­பற்­றக்­கூ­டிய அபா­யம் இருப்­ப­தால் அவ்­வாறு செய்ய அனு­மதி இல்லை என்­றார் அமைச்­சர்.