இரு துணைப் பிரதமர்கள், 25க்கும் குறைந்த அமைச்சர்கள்: அன்வார் யோசனை

இரு துணைப் பிரதமர்கள், 25க்கும் குறைந்த அமைச்சர்கள்: அன்வார் யோசனை

2 mins read
86f430f3-9e79-4450-a1cb-b550d1debfdf
அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிதி துணைப் பிரதமர் ஆவர் என்று தொடக்கம் முதலே சொல்லப்பட்டு வருகிறது. படம்: ஏஎஃப்பி -

மலே­சி­யா­வின் புதிய அமைச்­

ச­ரவை இன்­னும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை. இன்று டிசம்­பர் 1ஆம் தேதி அமைச்­ச­ரவை அறி­விக்­கப்­ப­டக்­கூ­டும் என்று சொல்­லப்­பட்டு வந்த நிலை­யில் அதற்கு வாய்ப்பு இல்லை என்ற தக­வல் வெளி­வந்­துள்­ளது.

பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் நேற்று பிற்­ப­க­லில் தமது எல்லா அலு­வல் பணி­க­ளை­யும் ஒத்தி வைத்­து­விட்டு அமைச்­ச­ரவை தொடர்­பான வேலை­களில் முழுக் கவ­னம் செலுத்­தி­ய­தாக 'த ஸ்டார்' இணை­யச் செய்தி தெரி­வித்­தது.

"அமைச்­ச­ரவை 25 அமைச்­சர் களை உள்­ள­டக்­கி­ய­தாக சுருக்­கப்­ப­ட­லாம். இது­வரை இல்­லாத வகை­யில் சிறிய அமைச்­ச­ர­வையை அமைப்­பதே அன்­வா­ரின் நோக்­க­மாக உள்­ளது. 25க்கும் கீழ் குறைக்­க­லாமா என்­பது குறித்து அவர் ஆலோ­சித்து வரு­கி­றார்," என்று தகவல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விப்­ப­தாக 'த ஸ்டார்' கூறி­யது.

அமைச்­ச­ர­வையை உருவாக்கு ­வ­தில் பல்­வேறு அர­சி­யல் அம்­சங்­களை அவர் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்ள வேண்டி உள்­ளது என்­றும் அச்­செய்தி குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, முகை­தீன் யாசின் அர­சாங்­கத்­தில் 32 அமைச்­சர்­களும், அவ­ருக்­குப் பின் வந்த இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் அர­சாங்­கத்­தில் 31 அமைச்­சர்­களும் இடம்­பெற்று இருந்­த­னர்.

இரண்டு துணைப் பிர­த­மர்­கள் இடம்­பெ­றக்­கூ­டும் என்­றும் அவர்­களில் ஒரு­வர் அம்னோ தலை­வர் அக­மது ஸாஹித் ஹமிதி என்­றும் மற்­றொ­ரு­வர் ஜிபி­எஸ் கட்­சி­யின் ஃபடில்லா யூசோ­ஃப்­பாக இருக்­க­லாம் என்­றும் ஊகத் தக­வல்­கள் கசிந்­துள்­ளன.

நிதி அமைச்சை தன்­வ­சம் வைத்­துக்­கொள்­ளவே அன்­வா­ரின் கட்சி விரும்­பு­கிறது. அதே சம­யம் இரண்­டாம் நிதி அமைச்­சர் பதவி உரு­வாக்­கப்­பட்­டால் அது அம்­னோ­வுக்கு அளிக்­கப்­ப­ட­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது. மற்­றொரு முக்­கிய பதவி உள்­துறை அமைச்சு. இத­னைப் பெற அன்­வார் கட்சி யும் அம்­னோ­வும் விரும்­பு­கின்­றன.

பிர­த­மர் அன்­வார் நேற்று முன்­தி­னம் மாமன்­ன­ரைச் சந்­தித்­தா­க­வும் அமைச்­ச­ர­வைப் பட்­டி­யலை அப்­போது அவர் மாமன்­ன­ரி­டம் வழங்­கி­ய­தா­க­வும் தெரி­கிறது.

கூடிய விரை­வில் அமைச்­ச­ர­வைப் பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­ட­லாம் என்று பிகே­ஆர் கட்­சி­யின் தக­வல் தொடர்­பாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும் மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.