தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயகத்திற்கு அதிக பணம் அனுப்பும் இந்திய வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
9610144b-1d5c-446e-8856-79f3e5704d70
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய ஊழியர்கள் தாயகத்திற்கு அனுப்பும் தொகை இந்த ஆண்டு $136 பில்லியனை எட்டக்கூடும் என்கிறது உலக வங்கி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளி­நா­டு­களில் வேலை­பார்க்­கும் இந்­திய ஊழி­யர்­கள் இந்த ஆண்டு முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வில் ஆக அதி­க­மான தொகை­யைத் தாய­கத்­திற்கு அனுப்­பி ­வரு­வ­தாக உலக வங்கி தெரி­வித்­து இருக்­கிறது.

இத­னால் இந்­தி­யா­விற்­கான இந்த ஆண்­டின் பணப் பரி­வர்த்­தனை விகி­தம் 12 விழுக்­காடு அதி­க­ரித்து 100 பில்­லி­யன் டாலரை (136 பில்­லி­யன் வெள்ளி) எட்­டக்­கூ­டும். அத்­து­டன் உல­கில் ஆக அதி­கப் பரி­வர்த்­த­னைத் தொகை­யைப் பெறும் நாடு என்ற சிறப்பை அது தக்­க­வைத்­துக்­கொள்­ளும்.

மெக்­சிகோ, சீனா, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் வெளி­நாட்­டில் வேலை­பார்க்­கும் குடி­மக்­கள் தாய­கத்­துக்­குப் பணம் அனுப்­பும் விகி­தத்­தில் இந்­தியா மிகத் தெளி­வாக முன்னிலை வகிக்கிறது.

சிங்­கப்­பூர், பிரிட்­டன், அமெ­ரிக்கா போன்ற பணக்­கார நாடு­களில் வசிக்­கும் இந்­தி­யத் திற­னா­ளர்­கள் இந்த ஆண்டு கூடு­த­லான தொகை­யைத் தாய­கத்­திற்கு அனுப்­பு­வ­தாக உலக வங்கி நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

காலப்­போக்­கில் வளை­குடா நாடு­கள் போன்­ற­வற்­றில் குறைந்த ஊதி­யம் பெறும் ஊழி­யர்­க­ளாக வேலை­பார்ப்­ப­தைக் கைவிட்டு, திற­னா­ளர்­க­ளாக வெளி­நா­டு­க­ளுக்கு வேலைக்­குச் செல்­வ­தில் இந்­தி­யர்­கள் முனைந்­துள்­ள­னர்.

வெளி­நா­டு­களில் அவர்­கள் பெறும் அதி­க­மான ஊதி­யம், கூடு­தல் வேலை­வாய்ப்பு, வலு­வி­ழந்­துள்ள இந்­திய ரூபா­யின் மதிப்பு போன்ற அம்­சங்­களும் இவ்­வாறு அனுப்­பப்­படும் தொகை உயர்ந்­தி­ருப்­ப­தற்­குக் கார­ணம்.

நாணய மதிப்பு வலு­வி­ழந்­த­தால் சென்ற ஆண்­டில் அந்­நி­யச் செலா­வணி தொடர்­பில் ஏறக்­கு­றைய 100 பில்­லி­யன் டாலர் நட்­டத்­தைச் சந்­தித்த இந்­தி­யா­விற்கு இந்­தத் தொகை பெரி­தும் உத­வி­யாக இருக்­கிறது. இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் மூன்று விழுக்­காட்­டுக்கு ஈடான இந்­தத் தொகை, நிதித் தட்டுப்பாட்டைச் சமா­ளிப்­ப­தில் முக்­கி­யத்­து­வம் வகிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

2016-17ஆம் ஆண்­டு­களில் அதிக வரு­வாய் கொண்ட நாடு­களில் இருந்து இந்­தி­யா­விற்கு அனுப்­பப்­பட்ட தொகை 26 விழுக்­காடு. ஒப்­பு­நோக்க, 2020-21ல் அது 36 விழுக்­காடு ஆனது. அதே கால­கட்­டத்­தில் வளை­குடா நாடு­கள், ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் போன்­ற­வற்­றில் இருந்து அனுப்­பப்­பட்ட தொகை 54 விழுக்­காட்­டி­லி­ருந்து 28 விழுக்­கா­டா­கக் குறைந்­தது. இந்­திய மத்திய வங்­கித் தக­வல்­களை மேற்­கோள்­காட்டி உலக வங்கி இவ்­வாறு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், பங்­ளா­தேஷ், பாகிஸ்­தான், இலங்கை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அவ­ர­வர் தாய­கத்­திற்கு அனுப்­பும் தொகை குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக உலக வங்கி கூறி­யது.