பயணிகளை ஈர்க்க தெற்குப் பகுதியில் நல மையம்

பயணிகளை ஈர்க்க தெற்குப் பகுதியில் நல மையம்

2 mins read

அடுத்த ஐந்து முதல் பத்­தாண்­டு­க­ளுக்­குள் நல வாழ்­வுத் துறை­யைப் பய­ணத்­து­றை­யில் முக்­கிய அம்­ச­மாக்­கும் திட்­டங்­க­ளின் ஒரு பகு­தி­யாக சிங்­கப்­பூ­ரின் தெற்­குக் கரை­யோ­ரத்­தில் நல மையம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத்­திட்­டத்­தில் ஆர்­வ­முள்ள மேம்­பாட்டு நிறு­வ­னங்­க­ளின் யோச­னை­களை வர­வேற்­கும் வகை­யி­லான ஆர்­வம் தெரி­விக்­கும் நட­வ­டிக்­கையை சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நவம்­பர் 23ஆம் தேதி தொடங்­கி­யது.

நல மையம் எங்கு கட்­டப்­படும் என்று பய­ணத்­து­றைக் கழ­கம் குறிப்­பிட்­டுச் சொல்­ல­வில்லை.

ஆனால் வருங்­கா­லத்­தில் கட்­டப்­ப­ட­வுள்ள மரினா சவுத் வட்­டா­ரத்­தை­யும் அரு­கில் உள்ள கரை­யோ­ரப் பூங்­காக்­கள், மரினா நீரிணை ஆகி­ய­வற்­றை­யும் முழு­மை­யாக்க புதிய மையம் உத­வும் என்று கழ­கத்­தின் விளை­யாட்டு, உடல்­ந­லத்­துறை நிர்­வாக இயக்­கு­நர் ஓங் லிங் லீ கூறி­னார்.

நலம் சார்ந்து பய­ணம் மேற்­கொள்­வோர் இங்கு வர­வும் அவர்­கள் கூடு­தல் நாள்­கள் தங்­க­வும் ஊக்­கு­விப்­ப­தன்­வழி அத்­திட்­டம் சிங்­கப்­பூ­ரின் பய­ணத்­து­றைக்­கும் பொரு­ளி­ய­லுக்­கும் பங்­க­ளிக்­கும் என்­றார் திரு­வாட்டி ஓங்.

கடந்த ஜூன் மாதம் முதன்­மு­றை­யான நடத்­தப்­பட்ட சிங்­கப்­பூர் நல விழா­வில், வரும் ஆண்­டு­களில் நாட்­டின் சுற்­றுலா அம்­சங்­களில் நலத்­துறை முக்­கிய அம்­ச­மாக மாறும் என்று பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கீத் லிம் கூறி­யி­ருந்­தார். உள்­ளூ­ரில் நலத்­து­றைக்­கான தேவையை வளர்த்து அதற்­கேற்ப கழ­கம் திட்­ட­மிட வேண்­டும் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் உடல்­ந­லம், மன­ந­லம் ஆகி­யவை மிக முக்­கி­யம் என்று உணர்த்­தி­யுள்­ள­தா­க­வும் திரு­வாட்டி ஓங் கூறி­னார்.

அதி­க­மான பய­ணி­கள் இத்­த­கைய நலம் சார்ந்த பய­ணங்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரு­கின்­ற­னர். இவ்­வே­ளை­யில் புதிய நல மையம் சிங்­கப்­பூரை 'நகர நலச் சர­ணா­ல­ய­மாக' உரு­வாக்­கும் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் குறிக்­கோ­ளுக்­குப் பங்­க­ளிக்­கும் என்றார் அவர்.

கிரு­மிப்­ப­ர­வ­லால் நடப்­பில் இருந்த எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்டு பய­ணி­க­ளின் வரவு அதி­க­ரித்து வரும் நிலை­யில் பய­ணத்­து­றைக் கழ­கம் புதிய நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது.

பயண வசதி, தொழில்­நுட்­பம், வலு­வான வர்த்­தக மையம் எனும் நற்­பெ­யர் ஆகி­யவை சிங்­கப்­பூ­ரின் பலம். அவற்­றைப் பயன்­ப­டுத்தி நலம் சார்ந்த பய­ணத்­துறை அம்­சங்­கள் உரு­வாக்­கப்­படும் என்­றார் திரு­வாட்டி ஓங்.

இப்­போ­தைக்கு தொழி­லுக்­கா­க­வும் வேறு கார­ணங்­க­ளுக்­காக வரு­வோ­ருக்கு சிங்­கப்­பூ­ரில் நலம் சார்ந்த சேவை­களை வழங்க திட்­ட­முள்­ள­தாக அவர் கூறி­னார்.