விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220ஆக உயர்த்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டம்

விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220ஆக உயர்த்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டம்

2 mins read
9d78dbcf-c855-483a-a124-c1fe03ea2c6e
-
multi-img1 of 2

இந்­தி­யா­வில் கடந்த 2014ஆம் ஆண்டு 74 விமான நிலை­யங்­கள் செயல்­பாட்­டில் இருந்த நிலை­யில், இப்­போது அந்த எண்­ணிக்கை 140ஆக உயர்ந்­துள்­ளது என்று அர­சாங்­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் அந்த எண்­ணிக்­கையை 220ஆக உயர்த்­து­வ­தற்கு அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் நரேந்­திர மோடி கோவா­வில் நேற்று மோப்பா அனைத்­து­லக விமான நிலை­யத்­தைத் திறந்­து­வைத்­தார்.

இணைப்பை வலுப்­ப­டுத்த திரு மோடி பெரும் முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கி­றார். அதற்­கேற்ப பல்­வேறு விமான நிலை­யங்­களை அவர் திறந்­து­வைத்­தும் பல விமான நிலை­யங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­யும் வரு­கி­றார். கடந்த மாதம் அரு­ணா­ச­லப் பிர­தேச மாநி­லத் தலை­ந­கர் இட்டா நக­ரில் டோன்யி போலோ விமான நிலை­யத்­தை­யும் ஜூலை மாதம் ஜார்க்­கண்ட் மாநி­லத்­தில் தியோ­கார் விமான நிலை­யத்­தை­யும் அவர் திறந்­து­வைத்­தார்.

சென்ற ஆண்டு நவம்­ப­ரில் நொய்டா அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு அடிக்­கல் நாட்­டிய திரு மோடி, அதற்கு முந்­திய மாதத்­தில் புகழ்­பெற்ற பௌத்­தத் தல­மான குஷி­ந­க­ரில் ஓர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தைத் திறந்­து­வைத்­தார்.

நேற்று திறப்­பு­விழா கண்ட மோப்பா அனைத்­து­லக விமான நிலை­யம், சிறு­மா­நி­ல­மான கோவா­வில் அமைந்­துள்ள இரண்­டா­வது விமான நிலை­யம். கடந்த 2016ஆம் ஆண்டு அடிக்­கல் நாட்­டப்­பட்ட நிலை­யில், அத­னைக் கட்டி முடிக்க ரூ.2,870 கோடி செல­வி­டப்­பட்­ட­தா­கப் பிர­த­மர் அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. இந்த விமான நிலை­யத்­தால் ஆண்­டுக்கு 4.4 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாள முடி­யும்.

நீடித்து நிலைக்­கத்­தக்க உள்­கட்­ட­மைப்பு என்ற கருப்­பொ­ரு­ளின் அடிப்­ப­டை­யில் அவ்­வி­மான நிலை­யம் கட்­டப்­பட்­டுள்­ளது. சூரிய மின்­சக்தி ஆலை, பசு­மைக் கட்­ட­டங்­கள், ஓடு­பா­தை­யில் எல்­இடி விளக்கு­கள், மழை­நீர் சேமிப்பு, மறு­சு­ழற்சி வச­தி­யு­டன் கூடிய அதி­நவீன கழி­வு­நீர்ச் சுத்­தி­க­ரிப்பு ஆலை உள்­ளிட்ட வச­தி­கள் அங்கு இடம்­பெற்­றுள்­ளன.