அதிநவீன, ஆற்றல்மிக்க ஆயுதப் பெருக்கத்தில் ரஷ்யா மும்முரம்

அதிநவீன, ஆற்றல்மிக்க ஆயுதப் பெருக்கத்தில் ரஷ்யா மும்முரம்

2 mins read
4324b85e-166b-4a1a-84a9-dab6a349728e
-

எதிரி நாடு­க­ளி­டம் இருந்து தற்­காத்­துக்­கொள்­ளும் வகை­யில் ஆற்­றல்­மிக்க புதிய தலை­முறை ஆயு­தங்­களைப் பெருக்குவதை ரஷ்யா முடுக்­கி­விட்­டுள்­ளது என்று அதன் முன்­னாள் அதி­பர் டிமிட்ரி மெட்­வ­டேவ் தெரி­வித்­துள்­ளார்.

"புதிய வகை ஆயு­தங்­கள் உட்­பட அழிவை ஏற்­ப­டுத்­து­வ­தில் ஆற்­றல்­மிக்க ஆயு­தங்­க­ளின் தயா­ரிப்­பைப் பெருக்கி வரு­கி­றோம்," என்று டெலி­கி­ராம் சமூக ஊட­கம் வழி­யாக திரு மெட்­வ­டேவ் கூறி இருக்­கி­றார்.

உக்­ரே­னில் மட்­டு­மன்றி, ஐரோப்பா, வட­அ­மெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து மற்­றும் பல பகு­தி­க­ளி­லும் தங்­கள் எதி­ரி­கள் செயல்­பட்டு வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இப்­போது ரஷ்­யப் பாது­காப்பு மன்­றத்­தின் துணைத் தலை­வ­ரா­கச் செயல்­பட்டு வரும் அவர், எவ்­வகை ஆயு­தப் பெருக்­கத்­தில் ரஷ்யா ஈடு­பட்­டுள்­ளது என்ற விவ­ரத்தை வெளி­யி­ட­வில்லை.

ஒலி­யின் வேகத்­தை­வி­டப் பல­மடங்கு வேகத்­தில் செல்­லக்­கூ­டிய 'ஹைப்­பர்­சோ­னிக்' ஆயு­தங்­கள் உள்­ளிட்ட புது­வகை ஆயு­தங்­களைத் தாங்­கள் உரு­வாக்கி வரு­வதாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் இதற்­கு­முன் பல­முறை கூறி­ உள்­ளார்.

ரஷ்ய ஏவு­க­ணை­களும் 'ஹைப்­பர்­சோ­னிக்' ஆயு­தங்­களும் அதி­நவீ­ன­மா­னவை என்­றும் அமெ­ரிக்­கா­வி­டம் இருப்­ப­தை­விட ஆற்­றல்­மிக்­கவை என்­றும் அதி­பர் புட்­டின் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கடும் சண்டை

இத­னி­டையே, தெற்கு உக்­ரே­னில் இரு­த­ரப்­பும் தாக்­கு­த­லைத் தீவி­ரப்­படுத்­தி­யுள்­ள­தாக பிபிசி செய்தி தெரி­விக்­கிறது.

ஒடெ­சா­மீது ரஷ்யா ஆளில்லா வானூர்­தித் தாக்­கு­தல்­களை முடுக்கி­விட்­டுள்­ளது. அதே­வே­ளை­யில், ரஷ்யா வச­மி­ருக்­கும் மெலிட்­டோ­போல் நகரை மீட்­கும் முயற்­சி­யில் உக்­ரேன் இறங்­கி­யுள்­ளது.

ரஷ்­யா­வின் பத்து ஆளில்லா வானூர்­தி­க­ளைச் சுட்டு வீழ்த்­தி­ய­தாக உக்­ரேன் ராணு­வம் கூறி­யது. ஆயி­னும், மேலும் ஐந்து ஆளில்லா வானூர்­தி­கள் எரி­சக்தி நிலை­யங்­களைத் தாக்­கி­ய­தால் கிட்­டத்­தட்ட ஒன்­றரை மில்­லி­யன் மக்­க­ளுக்கு மின்­வி­நி­யோ­கம் தடை­பட்­டுள்­ளது.

துறை­முக நக­ர­மான ஒடெ­சா­மீது தாக்­கு­தல் நடத்த ஈரா­னில் தயா­ரிக்­கப்­பட்ட ஆளில்லா வானூர்தி­களை ரஷ்யா பயன்­ப­டுத்­தி­ய­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

"ஒடெ­சா­வில் நிலைமை மிகக் கடி­ன­மா­ன­தாக உள்­ளது. துர­திர்ஷ்ட­வ­ச­மாக, ரஷ்­யத் தாக்­கு­தலால் மோச­மான பாதிப்பு ஏற்­பட்டுள்­ளது. அத­னால், மின்­வி­நி­யோ­கத்­தைச் சீர­மைக்க சில நாள்­கள் ஆக­லாம்," என்று உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி நேற்று முன்­தி­னம் காணொளி உரை மூல­மா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த அக்­டோ­பர் மாதத்­தில் இருந்தே உக்­ரே­னின் எரி­சக்­திக் கட்­ட­மைப்­பு­க­ளைக் குறி­வைத்து ரஷ்யா தாக்­கு­தல் தொடுத்து வரு­கிறது.

இதற்­கி­டையே, மெலிட்­டோ­போலில் உக்­ரேன் நடத்­திய ஏவு­கணைத் தாக்­கு­தலில் இரு­வர் மாண்டு­விட்­ட­தா­க­வும் பத்­துப் பேர் காய­முற்­ற­தா­க­வும் ரஷ்ய ஆத­ரவு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.