8 இடங்களில் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள்

8 இடங்களில் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள்

3 mins read
e8e3ee8c-7c88-4a56-a2f6-7b7df7118c25
-

சிங்­கப்­பூ­ரில் 386,000க்கும் மேற்­பட்­டோர் இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டு­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரில் இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூசி கடந்த அக்­டோ­பர் மாதம் நடுப்­ப­கு­தி­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

12 வய­து அல்லது அதற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் நேற்று முதல் ஃபைசர்-கொமிர்­னாட்டி இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

இதற்கு முன்­ன­தாக கடந்த அக்­டோ­பர் மாதம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து மொடர்னா இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூசி மட்­டும் போடப்­பட்­டது.

Sars-CoV-2 கிரு­மி­வ­கைக்­கும் ஓமிக்­ரான் கிரு­மி­வ­கைக்­கும் எதி­ராக இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூசி பாது­காப்பு அளிக்­கிறது.

இந்­நி­லை­யில், இன்­னொரு வகை இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சியை அறி­மு­கப்­ப­டுத்­தி­னால் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள மேலும் பலரை அது ஊக்­கு­விக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­படி கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளாத 70 வய­து அல்லது அதற்­கும் மேற்­பட்­டோ­ரில், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு 10,000 பேரில் ஏறத்­தாழ 70 பேர் மாண்­டதை அவர் சுட்­டி­னார்.

இந்த விகி­தம் நாட்­டின் மக்­கள்­தொ­கை­யு­டன் ஒப்­பி­டப்­பட்­டது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு 10,000 பேரில் ஏறத்­தாழ ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர் அல்­லது மர­ணம் அடை­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தேவை­யான, ஆக அண்­மைய தடுப்­பூ­சியை மூத்­தோ­ருக்­குப் போடு­வ­தற்கு முன்­னு­ரிமை தரப்­

ப­டு­வ­தாக திரு ஓங் கூறி­னார்.

60 வய­து அல்லது அதற்­கும் மேற்­பட்ட பத்­தில் ஒன்­பது பேருக்கு குறைந்­த­பட்ச பாது­காப்பு இருப்­ப­தாக இம்­மா­தம் 7ஆம் தேதி­யன்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­

தி­ருந்­தது.

பத்­தில் ஆறு பேர் அவர்­க­ளுக்­குத் தேவை­யான, ஆக அண்­மைய தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டு­ விட்­ட­தாக அமைச்சு கூறி­யது.

இருப்­பி­னும், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான குறைந்­த­பட்ச பாது­காப்பைக் கிட்­டத்­தட்ட 40,000 மூத்­தோர் இன்­னும்

பெற்­றுக்­கொள்­ள­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை அமை­தி­யான, சீரான நிலை­யில் இருப்­ப­தாக அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார். பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­தாக அவர் கூறி­னார். எக்ஸ்­பிபி அலையை அடுத்து, மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­வோர் எண்­ணிக்கை குறை­வாக இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

நேற்று முன்­தி­னம் நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான ஒரு வார சரா­சரி எண்­ணிக்கை 1,031ஆகப் பதி­வா­னது.

கொவிட்-19 கார­ண­மாக 101 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­னர். அவர்­களில் 11 பேருக்கு உயிர்­வா­யுக் கருவி பொருத்­தப்­பட்­டது. ஆறு பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, புவி­யின் வடக்­குப் பகு­தி­யில் பனிக்­கா­ல­மாக இருக்­கிறது. பனிக்­கா­லத்­தின்­போது கொவிட்-19 போன்ற கிரு­மிப் பர­வல் அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தால் நிலைமை மோச­ம­டை­யக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது.

அண்­மை­யில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைச் சீனா தளர்த்­தி­ இருப்­ப­தும் அக்­க­றைக்­கு­ரி­யது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றுக்கு எதி­ராக சிங்­கப்­பூ­ரின் மீள்­தி­றன் வலி­மை­மிக்­கது என்று திரு ஓங் கூறி­னார்.

ஓமிக்­ரான் கிரு­மி­வ­கை­கள் கார­ண­மாக இவ்­வாண்­டில் மட்­டும் சிங்­கப்­பூ­ரில் மூன்று கொவிட்-19 அலை­கள் ஏற்­பட்­டு­விட்­டதை அவர் சுட்­டி­னார்.

சீனா­வில் இது­வரை பாதிப்பு ஏற்­ப­டாத இடங்­களில் கிருமி பர­வி­னால் கொவிட்-19 கிருமி உரு­மா­றும் சாத்­தி­யம் இருப்­ப­தாக அமைச்­சர் ஓங் எச்­ச­ரிக்கை விடுத்­தார். ஹோங் கா நார்த் சமூக மன்­றத்­தில் உள்ள நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுவை திரு ஓங் நேற்று நேரில் சென்று பார்த்­தார்.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளுக்கு நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­கள் நேற்று மீண்­டும் அனுப்­பி­வைக்­கப்­பட்­ட­ன. மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை எளி­தாக்க இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

நேற்று முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை எட்டு வட்­டா­ரங்­க­ளுக்கு நட­மா­டும் தடுப்­பூசிக் குழுக்­கள் அனுப்­பி­வைக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

அவற்­றில் சுவா சூ காங், கம்­போங் சாய் சீ, தோ பாயோ சென்ட்­ரல் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள சமூக நிலை­யங்­களும் சமூக மன்­றங்­களும் அடங்­கும்.

ஒவ்­வோர் இடத்­தி­லும் நட­மா­டும் தடுப்­பூசிக் குழுக்­கள் மூன்று நாள்­க­ளுக்கு இருக்­கும். அதன்­பி­றகு, வேறு இடங்­க­ளுக்­கும் செல்­லும். நட­மா­டும் தடுப்­பூசிக் குழுக்­கள் எந்­தெந்த நாள்­களில் எங்கு இருக்­கும் என்­ப­தைக் காட்­டும் கால அட்­ட­வ­ணையை https://gowhere.gov.sg எனும் இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று பார்க்­க­லாம்.